முல்லைப் பெரியாறு அணையா? இந்திய ஒருமைப்பாடா? வைகோ

1 செப்

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முடிவு செய்து விட்டது கேரளா. எப்போது வேண்டுமானாலும் அணை உடைக்கப்படலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை பேராபத்தை உண்டாக்கி உள்ளது. கேரள அரசு பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.380 கோடி ஒதுக்கியுள்ளது. 700 மீட்டர் நீளத்தில் 7 அடி அகலத்தில் 54 அடி உயரத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது.

கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே தூக்கி வீசி விட்டு புதிய அணை கட்டுவதற்காக அனுமதியில்லாத இடத்தில் ராட்சத எந்திரங்களை கொண்டு வந்து ஏராளமான மரங்களை வெட்டி அணை கட்ட தொடங்கி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் சுமார் ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புலிகள் காப்பகம் இருப்பதால் அந்த பகுதியில் சிறிய கட்டிடம் கூட கட்டக் கூடாது என்று 1984-ம் ஆண்டு மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம், 1962-ம் ஆண்டு கேரள வன பாதுகாப்பு சட்டங்கள் கூறுகின்றன.

அந்த இடத்தில் தான் அய்யப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலை விரிவாக்கம் செய்வதற்கு அனுமதி கேட்டு முன்பு கேரள எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இதில் எதுவும் செய்ய இயலாது என்று பிரதமர் கூறினார். அதே கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து விட்டது. புலிகள் காப்பகம் உள்ள அந்த பகுதியில் சிறிய தடுப்பு அணை கூட கட்டக் கூடாது என்று கூறிய மத்திய அரசு அனுமதியில்லாத இடத்தில் அணை கட்ட அனுமதி கொடுத்துள்ளது.

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. அணைக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நேரலாம். முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடும் உடைந்து விடும்.

தமிழகத்தில் ஏராளமான கேரள மக்கள் வசிக்கின்றனர். அதுபோல கேரளாவில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இரண்டு மாநிலங்களிலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அந்த நிலைமை ஏற்படக் கூடாது என்று தான் நாங்கள் நினைக்கிறோம். முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் தமிழகத்திலிருந்து எந்த பொருளும் உள்ளே செல்லாது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக மக்களுக்கு மத்திய அரசு ஓர வஞ்சனை செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்றார் வைகோ.

************************************************

முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள‌ அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் விரோத நடவடிக்கைகள். முல்லை பெரியாறு அணையை உடைத்து அதற்குப் பதிலாக புதிய அணையை தமது கட்டுப்பாட்டில் கட்டவேண்டும் என்பது கேரள அரசின் விருப்பம், காரணம் கேரளப்பகுதியில் அமைந்திருந்தாலும் அணை தமிழ்நாட்டுக்கு சொந்தம். இதை மாற்றி தனது தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அது நினைக்கிறது.

இதை செயல்படுத்த கேரளா கூறும் காரணங்களில் இரண்டு முதன்மையானது. மிகப்பழமையான அணை அதலால் பலகீனமானது. அணை உடையும் பட்சத்தில் பல லட்சம் மக்கள் உயிர் உடமை இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இந்த இரண்டு காரணங்களுமே தவறானவை. முல்லை பெரியாறைவிட ப‌ழமையான அணைகள் உலகில் செயல்பாட்டில் இருக்கின்றன. ஆய்வு செய்த வல்லுனர் குழுவும் கேரள அரசின் அச்சம் தேவையற்றது எனக் கூறியிருக்கிறது. ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை உடைந்துவிட்டால் எந்தப்பகுதிகளெல்லாம் பாதிக்கப்படும் என கேரள அரசு கூறுகிறதோ அந்தப் ப‌குதிகள் அனைத்தும் முல்லை பெரியாறு அணையை விட உயரமான பகுதிகளில் அமைந்திருக்கின்றன.

அணையை தனதாக்கி வேறு இடத்திற்கு மாற்ற நினைப்பதற்கும், நீர்த்தேக்க அளவை உயர்த்த மறுப்பதற்கும் மெய்யான காரணம் அந்தப்பகுதிகளில் கட்டப்பட்ட களியாட்ட விடுதிகள், சொகுசு பங்களாக்கள் கட்டிய ரியக் எஸ்டேட் முதலாளிகளின் தேவை. நீர்மட்டம் உயர்ந்தாலோ, அணை தொடர்ந்து இருந்தாலோ அவர்களுக்கு இழப்பும் நட்டமும் ஏற்படும். அதனால் தான் அவர்களைக் காப்பதற்காக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நாடகமாடுகிறது.

எப்படி கேரள அரசியல்வாதிகளின் செயல்பாடு மக்களுக்கானதாக இல்லையோ அதேபோல் தமிழக அரசியல்வாதிகளின் செயல்பாடும் மக்களுக்கானதல்ல. மக்கள் தங்கள் நீராதாரங்களை உறுதிப்படுத்தும் விதமான போராட்டங்களை, சமரசமற்ற முறையில், ஓட்டுக்கட்சிகளை ஒதுக்கிவிட்டு முன்னெடுக்கவேண்டும். அது உலகின் தண்ணீர் வளங்களை கொள்ளயடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை நோக்கியும் விரிவடைய வேண்டும். அப்போது தான் இதுபோன்ற பிரச்சனைகள் தீர்வை நோக்கி நகரும்.

இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையையும் படிக்கலாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: