64 ஆண்டு விடுதலை(!) நடந்து பயணம் செல்லும் மக்கள்

4 செப்

பஸ் வசதியில்லாததால், 3 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கழித்து வருகின்றனர் நான்கு கிராம மக்கள்.

நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே 3 கிமீ தூரத்தில் தெற்கு பத்தினிப்பாறை, உலகம்மாள்புரம், தோப்பூர், வடக்கு பத்தினிப்பாறை ஆகிய 4 கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியூருக்கு செல்ல 3 கிமீ தூரம் நடந்து மூன்றடைப்பு சென்று பஸ் ஏற வேண்டும்.

இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, மாணவ, மாணவிகள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். இக்கிராமங்களுக்கு இதுநாள் வரை டவுன் பஸ் வசதி இல்லை.

மாணவ, மாணவிகள் அரசின் இவலச பஸ் பாஸ் திட்டத்தின் பயன்களை பெற முடியவில்லை. பெண்கள், நோயாளிகள், பீடி சுற்றுபவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ் வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் 4 கிராமங்களுக்கும் டவுன் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

********************************************************************

47 ல் நாம் பெற்றதன் பெயர் சுதந்திரம் அல்ல என்பதற்கான அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.  இந்த அரசின் திட்டங்கள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் சாதகமாகத்தான் தீட்டப்படுகின்றன. வறுமையில் ஆப்பிரிக்க நாடுகளை முந்தி சாதனை படைத்திருக்கும் வேளையில் கிராம மக்கள் சில கிலோமீட்டர் தூரம் நடந்துவந்து தான் பேருந்தைக் காணவேண்டும் என்பதெல்லாம் சாதாரணமாகப் போய்விட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: