கல்விக் கட்டணக் கொள்ளைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

14 செப்

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணமாக கோவிந்தராஜன் கமிட்டி அறிவித்த நிர்ணயத்தை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்துவதற்காக நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி ஆலோசனைகளை நடத்தி கட்டண விகிதத்தை அரசுக்கு பரிந்துரைத்தது. இதை ஏற்ற அரசு அவற்றை நடைமுறைப்படுத்தி அரசாணையை வெளியிட்டது.

ஆனால் இதை தனியார் பள்ளிகள் ஏற்கவில்லை. மாறாக பழைய கட்டணமே வசூலிப்போம் என அறிவித்தன. மேலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், கோவிந்தராஜன் கமிட்டியின் கட்டணத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

**********************************************************

கோவிந்தராஜன் கமிட்டி கல்விக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றொர்களிடம் கலந்தாலோசித்தோ, தனியார் பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்த்து அவற்றின் வசதிகள் அடிப்படையிலோ கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. மாறாக தனியார்பள்ளிகள் கொடுத்த செலவு விபரத்தின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டண வரம்பு திருப்தியளிக்கவில்லை என்று கல்வி வள்ளல்கள்(!) நீதிமன்றம் போனார்கள். கொள்ளையர்களுக்கு எப்போது திருப்தி ஏற்படும்?

மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்றும், நீதிபதிகள் புனிதமானவர்கள் என்றும் அவர்களின் தீர்ப்புகள் நியாயமானதாக இருக்கும் என்றும் ஒரு பிம்பம் வலிந்து ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால் நீதிபதிகள் பணம் வாங்கிக்கொண்டு சாதகமாக தீர்ப்பளிக்கும் நீதிமன்ற ஊழல் விவகாரங்கள் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது.

தங்கள் கொள்ளைக்காக எதையும் செய்யத்தயாராக இருக்கும் கல்விக் கொள்ளையர்கள், பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கக் காத்திருக்கும் நீதிக் கொள்ளையர்கள், இவர்களுக்கு மத்தியில் கல்வி……?

Advertisements

ஒரு பதில் to “கல்விக் கட்டணக் கொள்ளைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி”

  1. மதுரைசரவணன் செப்ரெம்பர் 14, 2010 இல் 10:01 பிப #

    திருடனாய் பார்த்து திருட்டை ஒழிக்காவிட்டால் …. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: