கடையநல்லூரில் விவசாயிகள் மண் அள்ள அனுமதி: இது சலுகையா? அவலமா?

14 செப்

கடையநல்லூர் பகுதிகளில் விவசாயிகள் குளங்களில் இருந்து கரம்பை மண் அள்ளி செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாக தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூர் பகுதியிலுள்ள பாசன விவசாயிகள் தங்களது வயல் பகுதிகள் தற்போது நீரற்று வறண்டு காணப்படுவதால் வயல்களில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அருகிலுள்ள குளங்களிலிருந்து கரம்பை மண் எடுத்து செல்ல வேண்டுமென பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது பாசன விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள குளங்களிலிருந்து கரம்பை மண் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்திருப்பதாக பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-விவசாயிகளின் நிலங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி பாசன குளங்களை ஆழப்படுத்தும் முகமாகவும் அந்தந்த விவசாயிகளுக்கு அருகிலுள்ள குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விவசாயி ஒருவருக்கு 80 யூனிட் கரம்பை மண் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் இதற்கான உரிய தகுதி சான்றிதழ் வருவாய் துறையினரிடம் இருந்து பெற்று அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுத்து செல்ல விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக‌ பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

*****************************************************************

மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதருவதும், விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதருவதும் அரசின் கடமை. ஆனால் தண்ணீரை தனியார்மயமாக்கும் பொருட்டு ஆறு, குளங்களை தூர்வாருவது உள்ளிட்ட மராமத்துப் பணிகளை அரசு செய்யக்கூடாது என்று உலக வங்கி கட்டளை போட்டதனால் அரசு அவைகளை புறக்கணித்துவிட்டது. விளைவு மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கும், கோடை காலங்களில் வறட்சியும். உலகவங்கி, காட் ஒப்பந்தம் போன்றவற்றால் விவசாயமும் தொழிலும் அழிந்துகொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை முன்னேற்றம் என்று கூசாமல் கூறுவது போலவே; ஆறு குளங்கள் நீர்நிலைகளை பாழாக்கிய கேவலத்தை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சலுகை செய்ததுபோல் காட்டுகிறார் பீட்டர் அல்போன்ஸ்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: