நாட்டிலிருந்து விவசாயம் துடைத்தெறியப்படுகிறது

19 செப்

சுரண்டை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் தண்ணீர் இல்லாமல் தென்னை மரங்கள் கருகி நிற்கின்றன

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியானசுரண்டை, சேர்ந்தமரம், ஊத்துமலை, பாண்டியாபுரம், ஈச்சந்தா, தன்னூத்து, வெள்ளாளன்குளம், குலசேகரமங்கலம், அருணாசலபுரம், அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கடையாலுருட்டி, குலையநேரி, குறிச்சன்பட்டி உள்பட 300க்கும் மேற்பட்ட கிராங்களில் பெரும்பான்மையான தொழில் விவசாயமாகும்.


தற்போது இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகிவிட்டன. இதனால் மரங்களை வெட்டி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் நஞ்சை, புன்செய் நிலங்கள் வீட்டுமனையாகவும், காற்றாலை அமைப்பதற்கும் விற்று வருகின்றனர். இங்கு கால்நடைகளான ஆடு, மாடுகள் முக் கிய வளர்ப்பு தொழிலாகும். வறட்சி காரணமாக அவைகளை கேரளாவுக்கு அடி மாட்டு விலைக்கு விற்கும் நிலை உள்ளது.


வறட்சி காரணமாக செங்கல் உற்பத்தி, கால் நடை வளர்ப்பு, வியாபாரம், கட்டுமானபணிகள், மண் பானை செய்தல் ஆகிய தொழில்கள் முடங்கிவிட் டன. இப்பகுதி இளைஞர் கள் தொழில் இல்லாமல் வேலைதேடி கேரளா, ஆந்திரா, திருப்பூர் கோவை போன்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள். வறட்சியில் இருந்து விடுபட குற்றாலம், செண்பகாதேவி அருவிகளில் அணைகட்டி தண் ணீரை சேமித்து அதை குடிநீருக்கும், விவசாயத்திற் கும் பயன்படுத்தலாம். இதனால் குடிநீர் பிரச்னை தீர வழி உள்ளது. இது போல் கருப்பாநதி அணை கால்வாய் களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நிலத்தடிநீர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து ஈச்சந்தாவை சேர்ந்த விவசாயி வேல்சாமி (44) கூறுகையில், “இதுபோன்ற வறட்சியை பார்த்ததில்லை. நாங் கள் வங்கி மூலமாக கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகிவிட்டன. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கடன்களை தள்ளுபடி செய்வதோடு இப்பகுதியை வறட்சி பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்” என்றார்.

***********************************************************************

வறட்சி, விவசாயம் செய்யமுடியாமை என்பதெல்லாம் இயற்கைச் சீற்றங்களால் வந்ததல்ல, செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. விவசாயம் சார்ந்தவற்றுக்கு மானியம் வழங்கக்கூடாது, ஆறு ஏரி குளங்கள் போன்ற நீர்நிலைகளை பராமரிப்பது பாதுகாப்பதிலிருந்து அரசு விலகிக்கொண்டு தண்ணீர் வளங்களை தனியார்மயப்படுத்த வேண்டும், இடுபொருட்களின் விலை உயர்வு, தானிய கொள்முதலிலிருந்து அரசு விலகுதல் போன்ற நிபந்தனைகள் ‘காட்’ ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின்மீது திணிக்கப்பட்டுள்ளது. ‘காட்’ ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்ட 1991 லிருந்து இன்றுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன்சுமை தாளாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இப்படி திட்டமிட்டு விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டிவிட்டு விவசாய நிலங்களை சிறப்பு பொருளார மண்டலம் உள்ளிட்டவை அமைப்பதற்காக தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அடிமட்டு விலைக்கு அபகரித்துக்கொண்டுள்ளனர். அதையும் அரசே முன்னின்று செய்து கொடுக்கிறது.

பாசன வசதிகளை முறைப்படுத்தாததால், முறையாக தூர்வாராததால் ஏரி, குளங்களில் நீரை சேகரிக்கமுடியாமல் வரட்சி ஏற்படுவதோடு, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குளும், வயல்களிலும் மழைநீர் புகுந்து தேங்கி நின்று பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏரி, குளங்கள் எத்தனை? தற்போது அவை பயன்பாட்டில் இருக்கின்றனவா? என்பதை மட்டும் சிந்தித்தாலே போதும் வறட்சியும் வெள்ளப்பெருக்கும் ஏன் ஏற்படுகின்றன என்று தெரிந்துபோகும்

இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான மக்களை வாழவைத்துக் கொண்டிருந்தது விவசாயம், சிலர் லாபமடைவதற்காக அதை அழிக்கிறது அரசு. என்ன செய்யவேண்டும்? விவசாயிகள் சிந்திக்கவேண்டிய காலம் இது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: