சொர்க்கபுரியின் நிலை: கண்திறப்பீர் மக்களே

20 செப்

உலகின் பணக்கார நாடு என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில் 7 பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக சமீபத்திய மக்கள்  தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கடந்த 2008-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 13.2 சதவீதம் பேர், அதாவது, 3 கோடியே 98 லட்சம்பேர் வறுமையில் வாழ்ந்து வருவது தெரிய வந்தது.

ஆனால், தற்போதைய கணக்கெடுப்பில், இந்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சமாக (14.3 சதவீதம்) உயர்ந்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க மக்கள் தொகையில், 7 பேரில் ஒருவர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. முன்பெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே பிச்சைக்காரர்கள் அதிகம் காணப்பட்டதாகவும், இப்போது சிறு நகரங்களிலும் பிச்சைக்காரர்கள் பெருகி விட்டதாகவும் அக்கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே அமெரிக்க எம்.பி.க்கள் வாங்குவதை கட்டாயம் ஆக்கும் 2 மசோதாக்கள், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

**********************************************************************

உலகின் எந்த நாட்டைச் சேர்ந்த மக்களானாலும் அவர்களிடம் அமெரிக்கா செல்வது ஓர் உச்சபட்ச கனவாகவே இருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்காவின் பிம்பம் பரப்பப்பட்டிருக்கிறது. உலகின் உன்னத நாடு அமெரிக்கா, அதன் காரணம் முதலாளிய பொருளாதாரமுறை, அது மட்டுமே மக்களை சிறப்புடன் வாழவைக்கும் என்று பொய்த்தரவுகள் காட்டப்பட்டன. பொருளாதாரம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் நடப்புகள் மூலம் முதலாளிய தாசர்களாக மக்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர். இன்றோ ஒன்றன்பின் ஒன்றாக திவாலாகிவரும் நிறுவனங்களும், வேலையில்லாத் திண்டாட்டங்களும் வறுமையும் இதுகாறும் அவர்கள் பரப்பிவந்த தரவுகள் பொய்யானவை என்பதை மக்களின் முகத்திலறைந்து பறைசாற்றுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: