குற்றாலம் வனப்பகுதியில் காட்டுத்தீ

20 செப்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் மலையில் ஞாயிற்றுக்கிழமை மரங்கள்  திடீரென தீப்பற்றி எரிந்தன.


மேற்குத்தொடர்ச்சி மலையில் குற்றாலத்தின் கரடி அருவிக்கு மேலே உள்ள வனப்பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த குற்றாலம் வனசரகர் வேலுசாமி உத்தரவின்பேரில், வனவர் தார்சியஸ் தலைமையில் வனகாப்பாளர்கள் சத்தியகுமார், ராஜேந்திரன் மற்றும் 20 ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


இதில், சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவுக்கு பரவிய தீயில், அரிய வகை மூலிகை செடிகள்,காய்ந்து போன செடி, கொடிகளும் எரிந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

*******************************************************************

அண்மைக்காலங்களில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகிறது, கடந்த மாதம் ரஷ்யாவில் ஏற்பட்ட காட்டுத்தீ கடும் விளைவுகளை ஏற்படுத்தியது. வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றிக்கொள்வதற்கு புவி வெப்பமடைதல் உட்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முன்பொருமுறை முதியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது காட்டுத்தீ குறித்த விபரம் ஒன்றை கூறினார். முந்திய காலங்களிலும் காட்டுத்தீ ஏற்பட்டிருக்கிறது, ஆனால் இப்போதைப் போன்று அணைக்க முடியாதபடி மாதக்கணக்கில், ஏக்கர் கணக்கில் எரிந்துகொண்டிருக்கும் தீயெல்லாம் அப்போது இல்லை என்றார். ஏனென்றால் அப்போது தீ பற்றுகிறது பரவுகிறது என்றால் அது தரையோடு, அதாவது தரையில் கிடக்கும் காய்ந்த சருகுகள் வழியே தான் பரவும். சருகுகளின் தீ சிறிய செடி கொடிகளை எரிக்குமேயல்லாது பெரிய அடிமரங்களை எரிக்கமுடியாது. எந்த அளவுக்கு தீ பரந்து விரிந்த அளவில் ஏற்பட்டாலும் அணைத்துவிடக்கூடியதாகவும், பெரிய நட்டத்தை ஏற்படுத்தாதவாறும் இருக்கும்.

ஆனால் தற்போது வனப்பாதுகாப்பு, கனிம வளங்களைத் தேடுதல், ஆராய்ச்சிப் பணி என்று காடுகளுக்குள் மனிதன் ஊடுறுவ ஊடுறுவ சருகுகள் பெரிய அளவில் சேராமல் தீயானது மேல்பகுதியின் வழியாக அதாவது பெருமரங்களின் வழியாக தீ பரவுவதால் அணைப்பதற்கு சிரமமாகவும், பல ஏக்கர்கணக்கில் எரித்துத்தள்ளி பெரு நட்டங்களை ஏற்படுத்துகிறது என்றார்.

எவ்வளவு எளிமையான சிறப்பான தொழில்நுட்ப அறிவு. அவர்களுக்கே தெரியாமல் வயதான மனிதர்களிடம் கொட்டிக்கிடக்கும் இது போன்ற அனுபவ அறிவை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: