அரசியல் மிக அவசியமானது

4 அக்

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலர் ராகுல் காந்தி மத்தியப் பிரதேசத்தில் இன்று அழைப்பு விடுத்தார்.அம்மாநிலத்தில் முக்கியப் பதவியை இளைய தலைமை வகிக்கும் நாளும் வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஷியோபூரில் இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சி இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் அவரது அமைச்சரவையில் நிறைய இளைஞர்களை நியமித்துள்ளார்.

இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தமிழகத்தில் பெரும் வெற்றிபெற்றுள்ளது. ஏறக்குறைய யாருமே இல்லாத நிலைக்கு சென்ற தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் இளைஞர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

**********************************************************

அரசியலுக்கு வரவேண்டும் என்பதைவிட அரசியலை விலக்கக்கூடாது என்பது தான் சரியானது. ஆனால் எது அரசியல்? என்பது முக்கியமானது. மாமா(!) நேரு தொடங்கி கொள்ளுப்பேரன்கள் வரை பதவியில் ஒட்டிக்கொண்டு மக்களை சுரண்டிக்கொழுக்கும் இவர்கள் செய்வது அரசியலல்ல, பொறுக்கித்தனம், ஓட்டுப் பொறுக்கித்தனம். திருவிழாவைப்போல் வரும் தேர்தலில் இயன்ற அனைத்தையும் செய்து ஓட்டுப்பொறுக்கி, பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் வியாதிகள்.

கருணாநிதி, ஜெயலலிதா; காங்கிரஸ், பிஜேபி; இடது, வலது கம்மூஸ்டுகள் (கம்யூனிஸ்டுகள் என்று தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்); ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என பேதமின்றி இவர்கள் என்ன பேசுகிறார்கள்? விடிந்தால் என்னென்ன அறிக்கை விடுகிறார்கள் என்று கிடைக்கும் பொழுதுகளிலும், டீக்கடை பெஞ்சுகளிலும் பேசிப்பேசி மாய்ந்து போவதல்ல அரசியல்.

இவர்கள் எதைச் செய்கிறார்கள்? எதைச் செய்யாமல் விடுகிறார்கள்? இவர்கள் செய்பனவறின் பின்னிருக்கும் காரணி என்ன? இவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தின் பொருள் என்ன? அந்த வித்தியாசத்தை தூண்டும் வினையூக்கி என்ன? என்பன போன்றவற்றை ஆராய்வதே அரசியல்

இது ஒன்றும் நம்மால் ஆகாத கடினமல்ல. வெகு சுலபம் தான், இவர்கள் சொல்வதையும் செய்வதையும் நினைவுபடுத்தி தொகுத்துப்பார்த்தாலே போதுமானது. சேமிப்புக்கிடங்குகளில் வீணாகும் உணவுதானியங்களை ஏழைகளிடம் கொடுப்பது சாத்தியமற்றது எனக்கூறும் மன்மோகன் சிங், தனியார் நிறுவனங்களுக்கு கோடிகளில் சலுகைகள் அள்ளிக்கொடுக்கிறார்.

விலைவாசி போகும் போக்கில் தன்னை தன் குடும்பத்தைக் கவனிக்கவே நேரமில்லை இதிலெங்கு இவர்களைக் கவனிப்பது என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. ஏனென்றால் தக்காளி விலை உயர்வுக்கும் பெட்ரோல் விலையில் அரசு தன் கட்டுப்பாட்டை தளர்த்திக்கொள்வதற்கும் நேரடித் தொடர்பு இருக்கும் போது, விலை உயர்வுக்கு மட்டும் நொந்து கொண்டால் நமது கவலை தீர்ந்துவிடுவதில்லை அல்லவா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: