பாஜகவும் முஸ்லீம்களும்

7 அக்

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி ஸ்டண்ட் அடித்துள்ளார்முதல்வர் நரேந்திர மோடி.

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் வாக்குகளை கொஞ்சமாச்சும் கவர வேண்டும் என்பதற்காக முஸ்லீம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக

அகமதாபாத்தின் ஜூஹாபுரா வார்டில் அல் சயத் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி பாஜக வேட்பாளராக படு பிசியாக வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சயத் கூறுகையில், குஜராத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் அக்கறையுடன் உள்ளார் மோடி. 5.5 கோடி குஜராத்திகளும் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பும் கலந்த சமுதாயமாகும்.

மோடி எங்களது தலைவர். இந்த மாநிலத்தின் முதல்வர் என்றார் சயத்.

சயத்தைப் போலவே மொத்தம் 9 முஸ்லீம் வேட்பார்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மொத்தம் 548 வார்டுகளுக்கு அக்டோபர் 10ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.

*************************************************************************

ஏற்கனவே பாஜகவில் நக்வி போன்ற சில முஸ்லீம்கள் இருக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மதவெறியை மறைப்பதற்கு தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே, முஸ்லீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் இருக்கும் முஸ்லீம்கள் பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களா? கோரைப்பல்லை மறைக்கும் தேவை இருக்கும் வரை அக்கட்சியில் தம்முடைய மதத்திற்காக செலாவணியாவோம் என்பதால் இருக்கிறார்கள். அப்துல்கலாமை அவரின் அறிவியலுக்காகவா அரசவைக் கோமாளியாக பாஜக முன்னிருத்தியது? அவரின் பார்ப்பனீயத் தன்மைக்காகத்தானே. குஜராத் இனப்படுகொலைகளின் போது பல்தேய்ப்பதற்குக் கூட வாயைத் திறக்காமல் அவர் தம் நன்றியைத் தெரிவித்தார்.

இருக்கட்டும், கடையநல்லூர் பாஜகவில் ஒரு முஸ்லீம் இருக்கிறார் தெரியுமா உங்களுக்கு? பெரிகுலைக் காதர் என்று பாஜகவினரால் அழைக்கப்படும் ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் தான் அவர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: