காணாமல் போகும் கோப்புகளுக்கு யார் பொறுப்பு?

16 அக்

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மாயமாகி விட்டது தெரியவந்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்டதை அடுத்து, 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் ஏற்பட்டது. சீக்கியர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டன. ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோர்ட்டில் இன்னும் நடந்து வருகிறது.

இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சூரூர் மந்தர் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் குறித்து விசாரணை நடத்திய கமிஷன்களின் அறிக்கை, எங்கு வைக்கப்பட் டுள்ளது என்பது குறித்து அவர் கேட்டிருந்தார். இவரது மனு, லோக்சபா செயலகத்தில் இருந்து, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின், அங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக, டில்லி மாநில உள்துறை அமைச்சக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த அறிக்கைகள், 25 ஆண்டு பழமையானவை என்பதால், அவற்றை கண்டுபிடிக்க போதிய கால அவகாசம் வேண்டும் என, தகவல் அதிகாரி கோரியிருந்தார். போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டும், அறிக்கைகள் குறித்து அவ ரால் பதில் அளிக்க முடியவில்லை. இதன்பின், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்தது. அதில், “மார்வா, தில்லான் மற்றும் நருலா ஆகிய கமிஷன்கள் அளித்த சில அறிக்கைகளில் சில முக்கியமான கோப்புகள் எங்குள்ளன என தெரியவில்லை’என, மனுதாரருக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் ஆணையம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தகவல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு, இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால், அதற்குள், இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கமிஷன்களின் கோப்புகளை காணவில்லை என, கூறுவது கவலை அளிக்கிறது’ என்றன.

********************************************************************

விசாரணை கமிசன்கள் இரண்டு காரணங்களுக்காக அமைக்கப்படுகின்றன. ஒரு பிரச்சனையில் அரசின் குற்றங்களை மூடி மறைத்து விசாரணையை தள்ளிவைக்கவும் தவிர்க்கவும் விரும்பும்போது, ஒரு பிரச்சனையில் மக்களின் கோபத்தை மட்டுப்படுத்தி நீர்த்துப்போக வைக்க விரும்பும்போது. ஆனால் குப்பைக்கூடை அளவுக்குக்கூட மதிக்கப்படாத விசாரணை அறிக்கைகள் காணாமல் போகின்றன. போகவைக்கப்படுகின்றன. இது மட்டுமா காணாம‌ல் போயிருக்கிறது? போபால் விசவாயு கசிந்து லட்சக்கணக்கானோர் மடிந்ததில் யூனியன் கார்பைடின் நிர்வாகி வாரன் ஆண்டர்சனை தப்பவைப்பதில் ராஜீவுக்கு இருந்த தொடர்புகள் குறித்த கோப்புகள் மாயமாய் மறைந்துவிட்டன. இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்திய காலகட்டத்தில் உள்ள கோப்புகள் மாயமாய் மறைந்துவிட்டன.

இந்தியாவின் ஜனநாயகம் பாரீர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிதுக்கிக் காட்டப்பட்டது. ஆனால் அரசின் செயல்பாடுகள் குறித்த கோப்புகளோ காணாமல் போய்விடுகின்றன. காணாமல் போகும் கோப்புகளுக்கு யார் பொறுப்பேற்பது? இந்தக்கேள்வி மக்களிடமிருந்து எழவேண்டும்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: