டாடாவின் தாராளம்: யார் அப்பன் வீட்டுச் சொத்து?

17 அக்

ஹார்வர்டு பல்கலைக் கழக வரலாற்றில் இதுவரை யாரும் தராத அளவுக்கு ரூ 220.6 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது டாடா குழுமம்.

வெளிநாடுகள் மூலம் இந்த அளவு பெரும் தொகையை இப்போதுதான் முதல்முறையாகப் பெறுகிறது ஹார்வர்ட்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரமான கல்விக்குப் புகழ்பெற்றது. 102 ஆண்டு பழமைமிக்கது.

இந்த நிறுவனத்துக்கு சில தினங்களுக்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திரா குழும துணைத் தலைவர் ஆனந்த் மகிந்திரா 10 மில்லியன் டாலர் (ரூ 44.1 கோடி) நன்கொடையை வழங்கினார். தனது தாயார் இந்திரா மகிந்திராவின் நினைவாக அவர் இதனை வழங்கினார். இது மிகப்பெரி்ய நன்கொடையாக அப்போது பார்க்கப்பட்டது.

இப்போது டாடா குழுமத்தின் சர் தோரப்ஜி டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை மூலம் 50 மில்லியன் டாலர் (ரூ 220.6 கோடி) நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கல்வி மையம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்ட இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1975-ம் ஆண்டு இந்த பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் பிஸினஸில் நிர்வாகவியல் படிப்பை முடித்தவர் ரத்தன் டாடா. 1995-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த சாதனையாளர் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் 102 ஆண்டு கால வரலாற்றில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பது இதுவே முதல்முறை.

புதிதாக கட்டப்படும் வளாகத்துக்கு டாடா ஹால் என்று பெயர் சூட்டப்போவதாகவும், 2013-ல் இது செயல்படத் துவங்கும் என்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

***************************************************************************

சாதாரண உழைக்கும் மக்கள் பத்துக் காசு யாருக்கும் கொடுத்தால் அதில் எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. ஆனல் இவர்களைப்போன்றவர்கள் ஒற்றைக் காசைக் கொடுத்தாலும் எதிர்பார்ப்பில்லாமல் கொடுப்பதில்லை. இவர்கள் கொடுக்கும் பணத்திற்காக நாளை அந்தப் பல்கலைக் கழகம் இந்திய மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து டாடா கொண்டுவந்த ஒரு லட்ச ரூபாய் காரை சிறந்த கார் என்றோ, குறைந்த விலையில் தரமான கார் என்றோ அல்லது இது போன்று ஏதோ ஒரு அறிக்கையை அளிக்கலாம். டாடா ஒரு லட்ச ரூபாய் காரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்போகிறார். அதனுடன் இணைத்தே இந்த நன்கொடையையும் பார்க்கமுடிகிறது.

முதலாளிகளிடம் இருக்கும் மூலதனமும் சொத்தும் அவர்கள் உழைத்துச் சம்பாதித்ததல்ல, சுரண்டிச் சேர்த்தது என கம்யூனிஸ்டுகள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 220 கோடி ரூபாய் யார்வீட்டுச் சொத்து? டாடா தன் பையிலிருந்து எடுத்துக்கொடுத்ததா? நினைவில் கொள்ளுங்கள் டாடாவின் ஒரு லட்ச ரூபாய் கார் தயாரிப்புக்கு மட்டும் அரசு சலுகைகளின் மூலம் கிடைக்கும் தொகை முப்பதாயிரம் கோடி. இப்போது சொல்லுங்கள் அது யார் வீட்டுப் பணம் என்று.

விரிவாகத் தெரிந்துகொள்ள இந்த இடுகையைப் படியுங்கள்.

பற்றி எரிந்தது நானோ கார், பற்றாமலேயே எரிகிறது மக்கள் வயிறு

Advertisements

ஒரு பதில் to “டாடாவின் தாராளம்: யார் அப்பன் வீட்டுச் சொத்து?”

  1. maduraisaravanan ஒக்ரோபர் 17, 2010 இல் 12:19 பிப #

    indiya palkalai kalakangkal ivarkal kankalukku thenpaduvathillai polum. pakirvukku nanri

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: