மருந்து நோய்க்காகவா? கம்பனிகளின் பணத்திற்காகவா?

21 அக்

அமெரிக்காவில் பிரபலமாகவுள்ள ஏழு மருந்து கம்பெனிகள், தங்கள் தயாரிப்புகளை அதிகம் பரிந்துரைக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்கொடையாக பணத்தை வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவத்தொழில் என்பது புனிதமான தொழிலாகவும், டாக்டர்களை கடவுளுக்கு இணையாக வைத்தும் மக்கள் போற்றுவர். பொருளாதார மயத்தால் உலகமே மாறிவரும் சூழ்நிலையில் மருத்துவத்துறையின் புனிதமும் கெட்டு வருகிறது. டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு, குறிப்பிட்ட சில மருந்து கம்பெனிகளின் மருந்துகளை வாங்கும்படி சீட்டு எழுதித் தருவர். மருந்து கம்பெனிகளும், தங்கள் விற்பனை பிரதிநிதிகளை அனுப்பி டாக்டர்களை சந்தித்து, மருந்து மாதிரிகளை கொடுத்து சிபாரிசு செய்யும்படி வலியுறுத்துவர். இப்படி சந்திக்கும் போதும், பின்னர் அவர் எத்தனை பேருக்கு சிபாரிசு செய்கிறார் என்பதை பொருத்து பணம், பரிசுப் பொருட்களால் கவனிப்பது உண்டு.

 

மருத்துவமனைகளில் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்தாலும், மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் வந்தார்கள் என்றால், அவரை காக்க வைக்காமல் பார்க்கும் டாக்டர்களும் உண்டு. இந்நிலைமை, இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகளில் எல்லாம் இதே கதைதான். வல்லரசு நாடான அமெரிக்காவில், பிரபல மருந்து கம்பெனிகள் தங்கள் தயாரிப்புகளை சிபாரிசு செய்யும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பத்திரிகை மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து, மருந்து கம்பெனிகள் – டாக்டர்களுக்கு இடையேயான உறவு நிலை எப்படியிருக்கிறது என்பது குறித்து புலனாய்வு செய்து, செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தான் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்காவில் பிரபலமாக உள்ள மருந்து கம்பெனிகளான ஜான்சன் அண்ட் ஜான்சன், எலி லில்லி, மெர்க், பபிசர், செபாலோன், அஸ்ட்ராஜெனிகா, கிளாஸ்கோ ஸ்மித்கிளின் ஆகியவை தங்கள் மருந்து பொருட்கள் நுகர்வோரிடம் சென்று சேரவும், டாக்டர்கள் மற்ற டாக்டர்களிடம் சிபாரிசு செய்யவும் அன்பளிப்பாக பணத்தை வாரி வழங்கியுள்ளன.

 

* டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள நர்சுகள், மருந்தாளுனர்கள், என 380 பேருக்கு லட்சக்கணக்கில் பணம் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

 

* அமெரிக்காவில், மருந்துகளை சிபாரிசு செய்ததற்காக மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையை பெற்று விடுகின்றனர். சிலருக்கு, மருத்துவ சிகிச்சை பார்த்து கிளினிக்கில் கிடைக்கும் வருமானத்தை விட, மருந்து கம்பெனிகள் அளிக்கும் தொகை அதிகமாக உள்ளதாம்.

 

* மருந்து கம்பெனிகள் பொதுவாக தங்கள் கம்பெனியின் பெயர் பொறித்த பேனாக்கள், கப்புகள் போன்ற பரிசுகளைத்தான் வழங்கி வந்தனவாம். இவற்றை டாக்டர்கள் விரும்பாத காரணத்தால், இதை பெரும்பாலான கம்பெனிகள் நிறுத்திவிட்டன. அதற்கு பதில், அவர்கள் கேட்கும் தொகையை அல்லது வெளியூர்களுக்கு போனால் நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா, விமானக் கட்டணம் ஆகியவற்றை கொடுத்து விடுகின்றனவாம்.

 

* 70க்கும் மேற்பட்ட மருந்து கம்பெனிகள் டாக்டர்களுக்கு அளிக்கப்படும் பணம் விவரத்தை வெளியிட மறுத்துவிட்டன

 

* இந்த ஆய்வு பற்றி கேள்விப்பட்டதும், சில கம்பெனிகளுக்கு தகவலை வெளியிடக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மருத்துவத்துறையை சீர்படுத்த கடந்த மார்ச் மாதம் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

*********************************************************************

உலகம் முழுவதும் இதுதான் நிலை. மருத்துவர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்தை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் நம்பிக்கையுடன் உட்கொள்கிறார்கள் நோயாளிகள். ஆனால் மருத்துவர்கள் அவ்வாறில்லை, எந்த மருந்து நிறுவனம் என்ன கொடுக்கிறது என்பதைப் பொருத்தும் மருந்துகள் தரப்படுகின்றன. ஒரு இடத்தில் கிளினிக் வைக்கும் மருத்துவருக்கு, இடத்திற்கான வாடகை உணவு உள்ளிட்டு கிளினிக்கின் உள் அலங்காரம் மருந்துச்சீட்டு என அனைத்தையும் பக்கத்தில் இருக்கும் மருந்துக்கடை (மெடிக்கல் ஷாப்) கவனித்துக்கொள்கிறது என்பதை நாம் கண்கூடாக கண்டுவருகிறோம்.

அண்மையின் பன்றிக்காய்ச்சல் பீதியை கிளப்பிவிட்டதன் பின்னணியில் மருந்து தயாரித்த நிறுவனங்கள் இருந்தது அம்பலமானது. பணம், லாபம், சுரண்டல் முதலாளிகளுக்கு இதைத்தவிர வேறு எதுவும் கண்களில் தெரிவ‌தில்லை என்பதுதான் உண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: