அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள் அரசு என்ன செய்யப்போகிறது?

3 நவ்

வேலை இல்லா காரணத்தால் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 980 பேர் தற்கொலை  செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து மேற்குமண்டல ஐ.ஜி. சிவனாண்டி கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த 2009 -ம் ஆண்டில் மேற்கு மண்டலத்தில் 550 தற்கொலைகளும், 2010-ல் 430 கொலைகளும் நடந்துள்ளன. இந்தத் தற்கொலைகள் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நடந்துள்ளன.

பொதுவாக 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம்.

மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், தற்கொலை தடுப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட எஸ்.பி. அளவிலும். மாதத்திற்கொரு முறை டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோர் அளவிலும் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வுக்காண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காவல்துறை ஆய்வாளர், வழக்கறிஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் மூலம் விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்படும் என்றார்

**********************************************************************

ஒவ்வொரு முறையும் தனியார் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்தம் செய்யும் போதும் தமிழக அரசு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என அள்ளி விடுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் அறிவித்த வேலை வாய்ப்பை கூட்டிப்பார்த்தால் தமிழக மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் இதுவும் அரசின் புள்ளிவிபரம் தான். என்றால் எது சரி?

ஒவ்வொரு தொழிற்சாலையும் ஆரம்பிக்கும்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு சலுகைகளும் வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்கள் வேலை வாய்ப்பை வழங்குகிறார்கள் என்பதுதான் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் இந்த சலுகைகளுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் வேலையிழப்பும் அதனால் தற்கொலைகளும் அதிகரித்துச் செல்கின்றன.

முதலாளிகள் அவர்கள் கொள்ளைலாபத்தை அள்ளிச்சேர்க்க வேண்டுமென்பதுதான் முன்னேற்றம் அதுதான் அரசின் கொள்கையேயன்றி மக்கள் நலனல்ல. இதைத்தான் இந்த தற்கொலைகள் போட்டுடைக்கின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: