கண்டுகொள்ளாமல் விடப்படும் கடல் அரிப்பு

7 நவ்

சின்ன முதலியார்சாவடியில் கடல் அரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்ன முதலியார்சாவடியில், கடல் அரிப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சின்ன முதலியார்சாவடியில், நேற்று அதிகாலை 3 மணிக்கு கடல் சீற்றம் தீவிரமடைந்தது. கரையோர பகுதிகளில், 15 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் சீறிப் பாய்ந்தது. அலையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கடற்கரையோரம் இருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன் வலை உலர்த்தும் கட்டடம் கடலில் சரிந்து உருக்குலைந்தது. கரையோரம் இருந்த இரண்டு தென்னை மரங்களும் கடலில் அடித்து செல்லப்பட்டன. அதிகாலையில் கடலின் கோர தாண்டவத்தை பார்த்த மீனவர்கள், கரையோரம் இருந்த குடிசை வீடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை கடல் சீற்றம் ஆக்ரோஷமாக இருந்ததால், அப்பகுதி மீனவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். சின்ன முதலியார்சாவடியில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்து மீட்டர் தொலைவிற்கு கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு 10 அடி நீளத்திற்கு கடற்கரை மணலை கடல் நீர் அரித்து வருகிறது. கடல் சீற்றத்தால் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. தற்காலிகமாக கடற்கரையோரம் மரக்கிளைகள், மணல் மூட்டைகளை கொண்டு கடல் அரிப்பை தடுத்து வருகின்றனர். கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த, 50க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன

**********************************************************************

சில ஆண்டுகளுக்கு முன்பு ஓங்கலை (சுநாமி) வந்தபோது கரையோரமுள்ள அனைத்துக் கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் எனும் கோரிக்கை பலமாக எழுந்தது. ஆண்டுகள் பல கடந்தபின்பும் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதே ஓங்கலையை காரணம் காட்டி கடற்புற மேலாண்மைத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மீனவர்களை கடற்கரையோரங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களை உல்லாசவிடுதிகளாகவும் கேளிக்கை மன்றங்களாகவும் மாற்ற அரசு துடிக்கிறது.

கடல் சீற்றங்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கிறோம் எனும் பெயரில் மீனவர்களை அப்புறப்படுத்துவதற்காகவே தூண்டில்வளைவுகளை அமைக்காமல் அலட்சியம் செய்துவருகிறது அரசு. மீனவர்களை பாதுகாப்பாக வாழவைப்பதை அலட்சியம் செய்து அங்கு பணக்காரர்கள் பொழுதுபோக்குவதற்கு மாளிகை கட்ட நினைக்கிறது, அதற்குப் பெயரோ மீனவர்களை பாதுகாப்பது.

அரசு என்பதன் பொருள் இதுதான்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: