நில மோசடி: வன்முறைக்கு மட்டுமல்ல ஊழலுக்கும் இராணுவத்தினருக்கு முன்னுரிமை

15 நவ்

ராணுவத்தில் நில மோசடிகள் நடப்பதற்கு, ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்கு ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “வீட்டோ’ அதிகாரம் தான் முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்களாக பாதுகாப்புத் துறை, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் கூறப்படுகிறது. இதில் பாதுகாப்பு துறைக்கு நாடு முழுவதும் 17.3 லட்சம் ஏக்கர் (7,000 சதுர கி.மீ.,) நிலம் சொந்தமாக உள்ளது. தவிர, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான இடங்கள் நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் மதிப்புமிக்க பகுதிகளில் அமைந்துள்ளன.

 

பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை முப்படைகள் மற்றும் ஆயுத தொழிற்சாலை வாரியம், பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்கும், அதில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கும் ராணுவ அதிகாரிகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அவர்கள் ராணுவ நிலங்களை விற்பனை செய்வதற்கு அதிகாரம் உண்டு. இந்நிலையில், டேராடூன் அருகே சுக்னா ராணுவ முகாமுக்கு சொந்தமான நிலத்தை, அதையொட்டியுள்ள தனியார் தேயிலை தோட்ட நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதில் நான்கு ராணுவ ஜெனரல்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. மேலும், நில மோசடி புகாரில் சிக்கிய ராணுவ அதிகாரிகளில் ஒருவரும், தேயிலை தோட்ட அதிபரும் குடும்ப நண்பர்கள் என தெரிந்தது. எனவே ராணுவ நிலத்தை குறைந்த மதிப்பீட்டுக்கு அவர்கள் தேயிலை தோட்ட அதிபருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த மோசடிக்கு, ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

இதுபோன்று ராணுவத்திற்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான மோசடிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சாலையில், ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள “ஸ்வான்கி சந்துஸ்தி’ வணிக வளாகமும் முறைகேடு சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மத்திய தணிக்கை துறை சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பாதுகாப்பு துறையில், குறிப்பாக இந்திய விமான படைக்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் விதிமுறைகளை மீறி வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்காக தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்கில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மும்பை, கொலபா கடற்படை தளத்துக்கு அருகில் கட்டப்பட்டுள்ள ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்குவதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது அரசியல் ரீதியில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க, ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரத்தை முறைப்படுத்தவும், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

********************************************************

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் செய்துவரும் வன்முறைகளும் அட்டூளியங்களும் கேள்கிகணக்கின்றி தொடர்கின்றன. அவர்களை யாரும் எதிர்க்கக்கூடாது, வழக்கு பதிவு செய்யக்கூடாது என்பதற்காக ஆயுதப்படை சிறப்புச் சட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு நடைமுறையிலிருந்துவருகின்றன. இதோ, இராணுவத்திற்கு சொந்தமான நிலங்களை விற்பதற்கு இராணுவ அதிகாரிகளுக்கு வீட்டோ அதிகாரமாம்.

இராணுவம் என்பது நம்மை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கும் தேசபக்தர்கள் இதற்குப் பதில் சொல்ல முன்வருவார்களா? தன்னுடைய ஆதிக்கத்திற்கு தடையாக இருக்கும் நாடுகளை அச்சுறுத்தவும், உள்நாட்டில் எழும் மக்கள் எழுச்சியை தடுத்து சீர்குலைக்கவுமே இராணுவ போலீஸ் துறைகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளே இதற்கான சான்று.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: