இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த ஊழல். வழங்குவது தேசிய வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி

24 நவ்
வீட்டுக் கடன் வழங்குவதில் மெகா ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் சேர்ந்து தேசிய வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவன அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட 5 நகரங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

இதையடுத்து கடன் மோசடியில் ஈடுபட்ட எல்ஐசி ஹவுசிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பேங்க் ஆப் இந்தியா மற்றும் சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர்கள், பஞ்சாப் நேசனல் வங்கியின் தலைமை பொது மேலாளர் உள்பட 8 பொதுத்துறை வங்கிகளி்ன் அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

வீட்டுக் கடன்கள் வழங்க லஞ்சம் வாங்கியது உள்பட பல்வேறு ஊழல்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்ஐசி நிறுவனத்தின் முதலீடுகள் பிரிவின் செயலாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முக்கிய ரியல் எஸ்டேட் புள்ளியும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது.

மணி மேட்டர்ஸ் நிறுவன தலைவரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில நாட்களாகவே எல்ஐசியில் நடந்த பல கோடி வீட்டுக் கடன் ஊழல் தொடர்பாக செய்திகள் வெளியானபடி இருந்தன. இந் நிலையில் ரகசிய விசாரணைகளை நடத்தி வந்த சிபிஐ நேற்று சில வங்கிக் கிளைகள், எல்ஐசி அலுவலங்களிலும் ரெய்ட் நடத்தியது.

இந் நிலையில் இன்று அதிரடியாக இந்த அதிகாரிகளை கைது செய்துள்ளது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து போலிப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, இல்லாத வாடிக்கையாளர்கள் மற்றும் பொய்யான நிலங்களின் பேரில் பல கோடி ரூபாயை கடனாகப் பெற்று ஏமாற்றியுள்ளனர் இந்த அதிகாரிகள்.

இந்த விவகாரத்தில் நடந்துள்ள ஊழலின் அளவு மிக அதிகம் என்றும், இதனால் நியாயமாக கடனுக்கு விண்ணப்பிக்கும் பல நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பணம் ஊழலில் கொள்ளை போயிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊழல் தொடர்பாக மேலும் ஏராளமான விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.

*************************************************
வீடுகட்ட கடன் வழங்குவது என்பதே ஒரு வகையில் ஊழல் தான். இதுமட்டுமல்ல கடன் வழங்கும் திட்டங்கள் அனைத்தும் சாராம்சத்தில் ஊழலை அடிப்படையாகக் கொண்டவைதான். எப்படி? மக்கள் வீடு கட்டமுடியாமல் தவிக்கிறார்கள், உரம் வாங்க முடியாமல் விவசாயம் செய்யமுடியவில்லை, கல்வி என்பது மிக அவசியமானது என்பன போன்ற காரணங்களுக்காக கடன்கள் வழங்கப்படுவதில்லை. ரியல் எஸ்டேட் வியாபாரம் படுத்தால், உர நிறுவனங்கள் நட்டமடைந்தால், தனியார் கல்லூரிகளில் இடம் நிரம்பாமல் காலியாகக் கிடந்தால் அவர்களின் லாபத்தை ஈடு செய்யும் விதமாக மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதை ஊழல் என்றழைப்பதா? கடன்வழங்கும் திட்டம் என்றழைப்பதா?

தொடர்ச்சியாக நாளொன்று வீதம் வெளிவரும் ஊழல்களில் அடுத்தது இந்த வீட்டுக் கடன் ஊழல். அதிகாரிகள் தொடங்கி அரசியல் வியாதிகள் வரை அனைத்திலும் அனைவரும் ஊழலுக்காகவே வாழ்கிறார்கள். இவர்களில் யாரையாவது மாற்றி மாற்றி தேர்தலில் தேர்ந்தெடுத்துவிட்டு ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதாய் மகிழ்ந்து கொள்வோமா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: