குற்றாலத்தில் வசூல் அருவி

24 நவ்

குற்றாலத்தில் குளித்துவிட்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், திருநீர் வைப்பதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் சீசன். பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருந்து கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு சபரிமலை செல்பவர்கள் வழியில் குற்றாலம் வந்து நீராடி விட்டுச் செல்வார்கள்.

ஆனால் இந்த வருடம் குற்றால சிறப்பு நிலை பேரூராட்சி சிறப்பு ஏற்பாடு என்ற பெயரில் குளித்து வி்ட்டு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், திருநீர் வைப்பதற்கு காலை வேளையில் 1 நபருக்கு ரூ. 2-ம், இரவில் ரூ. 5-ம் வசூல் செய்ய சுமார் ரூ.4 லட்சத்திற்கு வெளிநபர்களுக்கு ஏலம் வி்ட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் எதற்கெடுத்தாலும் கட்டணம் என்ற நிலை உள்ள ஒரே பகுதி ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் குற்றாலம் தான். இங்கு பேரூராட்சி ஒருபக்கம், திருக்குற்றால நாதர் ஆலயத்தினர் ஒருபக்கம் என வசூல் வேட்டை நடத்தி வருவது பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், அரசும் உடனடியாக பொட்டு வைக்க துட்டு ஏலத்தை ரத்து செய்து இலவசமாக இவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

***********************************************************

குற்றால அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உட்பட அனைத்து அருவிகளிலும் அருவியில் குளிக்குமுன்னர் வசூல் மழையில் நனைந்தே தீரவேண்டும் எனும் அளவுக்கு ஒப்பந்ததாரர்களின் அடாவடி கொடிகட்டிப் பறக்கிறது. அருவிகளுக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே வாகனங்களைத் தடுத்துவிடுகிறார்கள். கார் நிறுத்துமிடம் என ஒப்பந்தம் எடுத்துவிட்டு கார் நிறுத்தத்திற்கான எந்த வசதியும் இல்லாமல் திடல்வெளியில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும். வேறுபகுதிகளில் நிறுத்தினால் அடுத்த நொடியே வாகனம் காணாமல் போகும். வெளியில் நிறுத்தி விட்டு இருசக்கர வாகனங்களை தொலைத்துச் சென்றவர்களும், ஐந்தாயிரம் பத்தாயிரம் என அழுது மீட்டுச் சென்றவர்களும் ஏராளம். இதையும் மீறி குளிக்கச் சென்றால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் வளைவில் ஏறி நிற்கும் காவலர்கள் குளிப்பவர்களை அடிப்பதும், அநாகரீகமாக ஏசுவதும் சாதாரணம். காவலர்களை குளிக்கும் பெண்களை கிண்டல் செய்து மக்களிடம் அடிவாங்கிய நிகழ்வுகளும் உண்டு. உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் பகுதி என அனைத்திற்கும் எந்த வசதியும் செய்யாமல் காசை கறந்துவிடுகிறார்கள். எதிர்த்துக்கேட்டால் ரவுடிகள் கவனிக்கிறார்கள். குற்றாலம் பேரூராட்சியைக் கேட்டால் ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ஒப்பந்தங்கள் என்கிறார்கள். என்ன ஒழுங்கு? எது ஒழுங்கு?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: