நாடாளுமன்றம் நடந்தாலும், அமளியால் முடங்கினாலும் பலன் ஒன்றுதான்

25 நவ்

பார்லி., குளிர் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கியதில் இருந்து ஒத்திவைப்புகள் மட்டுமே நடந்துள்ளது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரை அமைதியாக நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகளும் , கூட்டு விசாரணை என்ற ‌பேச்சுக்கே இடமில்லை, பார்லி., யில் விவாததத்துக்கு தயார் என பிடிவாதம் பிடிக்க நவம்பர் 9ம் தேதி ஆரம்பித்த குளிர்கால கூட்டத்தொடர் ஒரு நாள் கூட நடக்கவில்லை. விளைவு 63 கோடி ரூபாய் இழப்பு. பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடத்த ஒரு நிமிடத்துக்கான செலவு ரூ. 26,000. இந்நிலையில் பார்லிமென்ட் கூட்டத்தொடரை பாதியிலே முடிக்க அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 13 ம் தேதி வரை குளிர் கால கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

**********************************************

நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்று எதுவுமில்லை. அரசு எப்படி செலுத்தப்படவேண்டும்? எதை நோக்கி நகரவேண்டும்? எந்த திசையில் பயணிக்க வேண்டும்? என அனைத்தையும் தீர்மானிப்பது உலக வர்த்தகக் கழகங்களும், பன்னாட்டு, தரகு முதலாளி வர்க்கங்களும் தான் எனும்போது நாடாளுமன்றங்களினால் ஆய பலன் என்ன?

மக்களைக் கொல்லும் பொருளாதார ஒப்பந்தங்களும், காட், அணுவிசை முதலான ஒப்பந்தங்களும் நாடாளுமன்ற அனுமதியின் பேரில்தான் வந்தனவா? பின் நாடாளுமன்றங்களை நடத்துவதன் நோக்கம் என்ன?

மெய்யாக அரசை நடத்துவது யார் என்பதை மறைத்து ஜனநாயக பம்மாத்து காட்டவேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற அரட்டை மன்றங்கள் நடத்தப்படுகின்றன.

அவை நடந்தாலும் சரி, நடக்காமல் போனாலும் சரி இரண்டுமே ஒன்றுதான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: