மழை சத்தமாய் பாடம் நடத்துகிறது

7 டிசம்பர்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், தலைநகர் சென்னை தத்தளித்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுவடைகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், மழை பெய்து வருகிறது. குறிப்பாக, “ஜல்’ புயலைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏற்பட்ட தாழ்வு நிலைகளால், 15 நாட்களாக, தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.”டெல்டா’ மாவட்டங்களில், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாய நிலங்கள் ஏரியாக மாறியதால், பல்லாயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகியுள்ளன. தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழு, வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மழைநீரை வெளியேற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.தொடர் மழையால் மக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவு சென்னை பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா ரோடுகளும் சின்னாபின்னமாகி விட்டன. எங்கும் வெள்ளக்காடாக இருப்பதால், நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.மழை அளவு எவ்வளவு? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.மகாபலிபுரம் 13, சென்னை அண்ணா பல்கலை, டி.ஜி.பி., அலுவலகம் 11 செ.மீ., சென்னை ஏர்போர்ட், செங்கல்பட்டு, செய்யூர், பொன்னேரி 9, தாம்பரம் 8, காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று மாலை 5.30 மணி நேர நிலவரப்படி, சென்னையில் 4 செ.மீ., மழை பதிவானது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடலில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்த மண்டலமாக மாறி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கடலில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகரில் மழை விட்டுவிட்டு பெய்யக்கூடும். அவ்வப்போது தரைக்காற்றும் பலமாக வீசும்.இவ்வாறு ரமணன் கூறினார்.

கனமழைக்கு 181 பேர் பலி : தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு, 41 குழந்தைகள் உட்பட, இதுவரை 181 பேர் உயிரிழந்துள்ளனர். 2,167 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 970 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 4,185 குடிசைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக, வருவாய் நிர்வாகத் துறை கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

**************************************************

இந்தச்செய்தியை தேதியை மாற்றிவிட்டால் ஓவ்வொரு ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொருமுறை மழை வரும்போதும் இதே நிலைதான். கிடைக்கும் மழைநீரை சேர்த்துவைத்து பயன்படுத்தவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கும் ஏற்பாடு செய்யமுடியாத அளவிற்கு திறனில்லாதவர்களா நாம்? ஆனால் எந்த ஆட்சியாளர்களும் இதைச் செய்வதில்லை என்றால் காரணம் என்ன? முதலாளிகளின் லாபத்தை உறுதி செய்வதற்காக உலக வங்கி முதலான நிறுவனங்கள் ஆணையிடுகின்றன. அதை நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததாய் நம்பிக்கொண்டிருக்கும் அரசுகள் தலைமேல் கொண்டு செயல்படுத்துகின்றன. மழைக்காலங்களில் பெய்யும் நீரை சேகரித்து முறையாக நகராட்சி மூலம் வினியோகித்தால், வெள்ளச் சேதங்கள் ஏற்படாது, வெயில்கால வறட்சியும் தட்டுப்பாடும் நீங்கும், ஆறு குளங்களில் நீர் சேர்ந்திருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பாசனத்திற்கும் பயனளிக்கும். ஆனால் இதைச் செய்தால் தண்ணீர் வியாபாரம் செய்யும் அத்தனை நிறுவனங்களுக்கும் வியாபாரம் நடக்காது. விரல்விட்டு எண்ணத்தக்க அவர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதால் கோடிக்கணக்கான மக்களை தவிக்கவிடுகிறார்கள்.

மழை நடத்தும் இந்தப்பாடத்தை புரிந்துகொள்ளத் தயாரா நீங்கள்?

Advertisements

ஒரு பதில் to “மழை சத்தமாய் பாடம் நடத்துகிறது”

Trackbacks/Pingbacks

  1. Tweets that mention மழை சத்தமாய் பாடம் நடத்துகிறது « நல்லூர் முழக்கம் -- Topsy.com - திசெம்பர் 7, 2010

    […] This post was mentioned on Twitter by ஏழர, sandanamullai. sandanamullai said: https://nallurmuzhakkam.wordpress.com/2010/12/07/rain-lession/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: