சௌதியிலும் அரசை எதிர்த்தால் தீவிரவாதி பட்டம்தான்

7 டிசம்பர்

சவுதி அரபிய அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை விஷம் கலந்த வாசனைப் பொருட்கள் கொடுத்து கொலை  செய்ய அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு்ள்ளது.

அவர்கள் வங்கிகளையும், பெரிய நிறுவனங்களையும் கொள்ளையடிக்கவும் திட்டமிட்டிருந்ததாக சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில மாதங்களில் 149 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக கடந்த மாதம் சவுதி தெரிவித்தது. அவர்கள் சவுதி அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்க பணம் மற்றும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தனர் என்று அது மேலும் தெரிவித்தது.

விசாரணையில் கைதானவர்கள் விஷம் கலந்த வாசனைப் பொருட்களை அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களை கொல்லத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

கைதானவர்களில் 124 பேர் சவுதியைச் சேர்ந்தவர்கள், 25 பேர் வெளிநாட்டவர்கள். அவர்களுக்கு சோமாலியா மற்றும் ஏமன் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்று உள்துறை அமைசச்கம் கடந்த மாதம் தெரிவித்தது.

கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தான் செய்த குற்றத்திற்கு வருந்துவது போல் நடித்து சவுதியின் தீவிரவாத ஒழிப்பு படையின் தலைமை அதிகாரியான இளவரசர் முஹம்மது பின் நயீபை கொல்ல முயன்றான. ஆனால் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

*******************************************************

சௌதி எண்ணெய் வளம்மிக்க பணக்கார நாடு என்பது தெரிந்ததுதான். ஆனால், சௌதியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டிருக்கிறது. உதவித்தொகையும், மானியங்களும் அளித்து மக்களைச் சமாளித்து வந்தாலும், தற்போது மனியங்களை வெட்டும் நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். நகரங்களைத் தவிர உள்ளடங்கிய பகுதிகளில் கிராமப்புறங்களில் மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் அரசுக்கு எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. இந்த எதிர்ப்பை தீவிரவாதமாக மொழிபெயர்க்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இந்தியா மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் அரசை எதிர்ப்பவர்கள் தீவிரவதிகளாகத்தான் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: