திட்டங்கள் நிவாரணத்திற்கா? கமிசனுக்கா?

10 டிசம்பர்

சென்னையால் கன மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் ரூ. 135 கோடி மதிப்பீட்டில் புதுப்பித்து சீரமைக்கப்படவுள்ளன என்று மாநகர மேயர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த சில தினங்களாக பெய்த பருவ மழையினால் ஏற்பட்டுள்ள சாலை பாதிப்புகளை சரிசெய்ய முதல்வர் கருணாநிதி, சென்னை மாநகராட்சியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சென்னையில் 154 பேருந்து சாலைகள் 96.8 கி.மீ. நீளத்திற்கு ரூ.47.70 கோடியிலும், 112 உட்புறச் சாலைகள் 49.5 கிமீ. நீளத்திற்கு ரூ.12.40 கோடியிலும் மொத்தம் ரூ.60.10 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு குறுகிய கால ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

4 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் அளவில் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் ஒட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதில் 10 நாட்களில் 91 ஆயிரத்து 800 சதுர மீட்டர் அளவிற்கு ரூ.2.2 கோடி செலவில் ஒட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன.

44 பேருந்து சாலைகள் 21.2 கி.மீ நீளத்தில் மேம்படுத்துவதற்காக ரூ.10 கோடியே 15 லட்சம் செலவில் ஒப்பந்தங்கள் தயார் நிலையில் உள்ளன. 778 உட்புறச் சாலைகள் 186.21 கி.மீ. நீளத்திற்கு ரூ.39.73 கோடி செலவில் திட்ட மதிப்பீடுகள் தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்கள் கோருதல் என பல்வேறு நிலைகளில் உள்ளன. 62 குடிசைப்பகுதிகளில் பழுதடைந்த 52.66 கி.மீ. நீளமுள்ள 224 கான்கிரீட் சாலைகள் ரூ.5.46 கோடி செலவில் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட உள்ளன.

அரசு நிதி ரூ.60.10 கோடி, மாநகராட்சியின் நிதியிலிருந்து ரூ.75 கோடி என மொத்தம் ரூ.135 கோடி செலவில் சென்னை மாநகரில் 1312 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட்டு 2011 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். புதுப்பிக்ககப்படும் சாலைப்பட்டியல் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

**************************************

தமிழகத்தின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக 1600 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. எந்த ஒரு பாதிப்புக்கும் நிதி கோரிப்பெற்று திட்டங்கள் போட்டு தங்கள் பைகளை நிரப்பிக்கொண்டு போய்விடுகிறார்கள். மக்களுடைய பாதிப்பு இந்த அரசியல் வியாதிகளுக்கு பணம் பண்ணும் வாய்ப்பாகத் தெரிகிறது. கடந்த மழையில் திட்டம் தீட்டி சாலைகள் சரிசெய்யப்படவில்லையா? அது அடுத்த மழைக்கு தாங்கவில்லை என்றால் அதன் பொருள் என்ன?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: