புளியங்குடியில் கரடி, பீதியில் மக்கள்

17 டிசம்பர்

கடையநல்லூரை அடுத்த‌ புளியங்குடி வனப்பகுதியில் கரடிகள் படையெடுப்பால் மக்கள்  பீதியில் உள்ளனர்.

புளியங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, மான், மிளா மற்றும் அரியவகை விலகினங்கள் ஏராளமாக உள்ளன. சொக்கப்பட்டி, தலையணை மலைப்பகுதிகளில் கரடிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. பெரும்பாலும் கோடை காலங்களில் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் விளையும் முந்திரிப் பழங்களை உண்பதற்காக கரடிகள் அங்கு வருவது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தலையணை பகுதியில் கரடி ஒன்று செந்நாய் கூட்டத்தில் சிக்கி குதறப்பட்டு கிடந்தது. தற்போது மழைக்காலம் என்பதால் வனப்பகுதியில் காட்டு ஈக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவற்றிடம் இருந்து தப்ப கரடிகள் அங்கிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து திறந்தவெளி பகுதியில் நடமாடி வருகின்றன. புளியங்குடி வெள்ளூரணி பகுதியைச் சேர்ந்த முகமது வாவா என்ற விவசாயி தோட்டத்தில் பட்ட பகலில் புகுந்த கரடி அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கடித்து குதறியது.

இதனால் நரியூத்து, செட்டிகுளம், தோணுகால்குளம், பெரிய தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிணறுகளைக் காக்கும் காவலர்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து புளியங்குடி வனச்சரகர் மயில், வனக்காப்பாளர்கள் சங்கர் உள்ளிட்டவர்கள் செட்டிகுளம் பகுதியில் உள்ள தோட்டங்களில் சோதனை நடத்தினர். அப்போது பேச்சிமுத்து என்பவரது தோட்டத்தில் கரடி வந்ததற்கான அடையாளம் காணப்பட்டது.

மேலும் தோட்ட பகுதியில் கரடி மற்றும் மற்ற விலங்குகள் வந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், காவலர்களுக்கு பாதுகாப்புக்காக பட்டாசு பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் வனச்சரகர் மயில் தெரிவித்தார்

*************************************************

வனக் காவலர்கள் இதுபோன்ற அசாதாரண நிலையில் செய்தி வந்தால் மட்டும் செயல் படுவது அல்லது செயல்படுவது போல காட்டிக்கொள்வது என்ற அளவில் தான் இருக்கிறார்கள். இந்தக் காட்டுப் பகுதியில் மிளாக்கள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் ரஹீம் பெல்ட் அதிபரின் வீட்டு விருந்தில் மிளா பிரியாணி பரிமாறப்பட்டிருக்கிறது.

இது ஒருபுறமிருக்க ஈக்களின் தொல்லையால் கரடிகள் ஊருக்குள் வருவதாக இந்தச் செய்தி கூறுகிறது. இது தவறானது. மயிரடர்ந்திருக்கும் கரடிகளை ஈக்களால் தொல்லை செய்ய முடியாது. தேன்கூட்டை கலைத்து தேன் குடிப்பது கரடிகளின் வழக்கம். அப்போது தேனீக்கள் கொட்டுவது கரடியை பாதிக்காது காரணம் அவற்றின் உடலில் மயிரடர்ந்திருப்பது. எனவே கரடிகள் ஊருக்குள் வருவதற்கு ஈக்கள் காரணமல்ல. அதேநேரம் செந்நாய்களினால் குதற‌ப்பட்ட கரடி பற்றியும் செய்தி கூறுகிறது. இங்கு தான் ஐயம் வருகிறது, ஏனென்றால் மிளாக்களை வேட்டையாட செந்நாய்களைத்தான் பயன்படுத்துகின்றனர்.

வனக்காவலர்கள் தங்கள் எல்லாவித தூக்கத்திலிருந்தும் விழிக்க வேண்டும். ஆட்டைக்கடித்த கரடி, காட்டுப்பகுதி வயல்களிலும், தோட்டங்களிலும் காவல் செய்யும் மக்களைத் தாக்கினால்….?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: