அச்சன்புதூர்காரர் சௌதியில் கொலையா? தற்கொலையா?: விசாரிக்காமல் தூங்கும் நெல்லை ஆட்சியர்

18 டிசம்பர்

சவுதி அரேபியாவில் வேலை பார்த்த தமிழர் கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியாமல் அவர் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூர் அம்மன்கோவில் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமையா. அவருடைய மகன் முருகையா. இவருக்கும் கடையநல்லூர் அருகே உள்ள சுப்பையா மகள் உத்தமி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரவீன்குமார், சுவாஷி என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

முருகையா கடந்த 2008-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு தனியார் நிறுவன டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது வாரம் ஒருமுறை வீட்டில் உள்ள தனது மனைவி குழந்தைகளிடம் டெலிபோனில் பேசுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகையாவின் செல்போனில் இருந்து அவருடைய மாமனார் சுப்பையா போனுக்கு மர்ம அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் முருகையா திடீர் என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். அதுகுறித்து கூடுதல் விபரம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் போனை வைத்து விட்டார்.

இதனால் முருகையாவின் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். போனில் பேசியவர் பதில் ஏதும் கூறாமல் போனை வைத்ததால் அது பொய்யான தகவலாக இருக்கும் என்று நம்பினார். இருந்தாலும் முருகையா மறுபடியும் வீட்டுக்கு போன் செய்து பேசுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆனால் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராத நிலையில் முருகையா வேலை செய்த கம்பெனியை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது முருகையாவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேலும் அதிரிச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முருகையாவின் மாமனார் சுப்பையா தனது மருமகன் கதி என்ன என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை எனத் தெரிகிறது

******************************************************************

இரண்டு மாதங்கள் கடந்த பின்பும் ஒரு விபரமும் தெரியாமல் குடும்பத்தினர் சோகத்தில் முடங்கியிருக்கிறார்கள். இதுவிசயத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கைக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையிலேனும் என்ன நடந்தது என்பதை விசாரித்து குடும்பத்தினருக்கு தெரிவிப்பது அரசின் கடமையாகும். மட்டுமல்லாது இஸ்லாமியரல்லாத பிற மதத்தவர்களை சௌதியில் புதைப்பதில்லை என்பதால் அவர் உடலை இந்தியா வரவழைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளைச் செய்வதும் அரசின் கடமையாகும். இதுகுறித்து ஒரு மின்னஞ்சல் நல்லூர் முழக்கம் சார்பாக‌ மாவட்ட ஆட்சியர் எம். ஜெயராமன் அவர்களுக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும் இது குறித்து விபரம் அறிந்தவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய இடுகை

அச்சன்புதூரைச் சேர்ந்தவர் சௌதியில் ஐயத்திற்கிடமான மரணம்


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: