வரி செலுத்தாவிட்டால் பறிமுதல், கடையநல்லூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

20 டிசம்பர்

கடையநல்லூர் நகராட்சியில் வரி இனங்களை செலுத்த தவறினால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றையும், வியாபாரிகள், குத்தகைதாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய குத்தகை இனங்களுக்கான ஏலம் கேட்கப்பட்ட மீதி தொகை ஆகியவற்றையும் காலதாமதம் செய்யாமல் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவும். சனிக்கிழமை விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் நலன் கருதி கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய சிறப்பு கவுண்டரிலும் பணம் செலுத்தி கொள்ளலாம்.

 

வரி செலுத்தாதவர்களை நகராட்சி கமிஷனர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் மகேஷ்வரன், நகரமைப்பு செயலாளர் சேக்அப்துல்காதர், மேலாளர் ஆறுமுகம் மற்றும் வருவாய் உதவியாளர்கள் முருகேசன், துரைக்குமாரசாமி, மணிகண்டன், மாடசாமி, சண்முகம், செந்தில்குமார், செல்லம்மாள், முருகம்மாள், ராஜசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சந்தித்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிவிபரம் மற்றும் பழைய பாக்கியை செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.

 

துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் அர்ச்சுனன், குமார் ஆகியோர் கொண்ட குழுவினரும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும், துண்டு பிரசுரங்கள் மூலமும் வரிசெலுத்த வேண்டுமென்று கூறி வருகின்றனர்.

 

கடையநல்லூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி, குத்தகை இனங்களுக்கான பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்திடும் வகையில் வரிஇனங்களை உடனே செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: கடையநல்லூர்.ஆர்க்

*************************************************************

அண்மையில் சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு அனைத்துக் கட்சிகளுமே தனித்தனியாக கண்டனங்களை தெரிவித்தன. அத்தோடு முடிந்தது தொடர் நடவடிக்கைகளோ, போராட்டமோ இல்லை. ஆனால் இப்போது நகராட்சியின் அடுத்த நடவடிக்கை வந்திருக்கிறது. வரி கட்டாவிட்டால் பறிமுதல். வரி கட்டாமலிருப்பது தவறு தானே என்று சிலர் நியாயவாதம் பேசலாம். கடையநல்லூரில் பெரும்பாலானோர் கையூட்டு கொடுத்து சொத்து வரியை குறைத்து மதிப்பிடவைத்தவர்கள். நியாயவாதம் பேசுவதும் அவர்கள் தான். ஆனால் முத்துக்கிருஷ்ணாபுரத்தின் உள்ளடங்கிய பகுதியைச் சேர்ந்த கல் ஆசாரிகள், வலசை, பச்சேரியைச் சேர்ந்த நொடித்துப்போன விவசாயிகள் போன்றவர்கள் தான் இந்த பறிமுதல் உத்தரவினால் பாதிக்கப்படப் போகிறவர்கள். இப்படி மிரட்டி பிடுங்கப்படும் வரி என்ன வழிகளில் செலவிடப்படுகிறது? கடையநல்லூர் நகராட்சியின் கடந்த ஆண்டு வரவு 3 கோடியே மூன்று லட்சம் இதில் பராமரிப்பு உள்ளிட்ட மக்கள் பணிகளுக்கு செலவிட்டது 1 கோடியே 45 லட்சம் இந்தப் பணிகளைச் செய்வதற்கான நிர்வாகச் செலவு 2 கோடியே 22 லட்சம். பற்றாக்குறை 64 லட்சம். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கதவைப் பிடுங்கிச் செல்வதா? பிடுங்கியதை ஊதரித்தனமாக செலவு செய்வதா? எது நியாயம் என்பதை நியாயவாதம் பேசுபவர்கள் கூறலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: