வழக்குறைஞர்கள் புறக்கணிப்புப் போர்: நீதி(!)மன்றங்கள் முடங்கின‌

23 டிசம்பர்

தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞகர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்கள் புதிய சட்டமான 2010 ஐ அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று முதல் 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் 70 ஆயிரம் பேர் நேற்று முதல் 3 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சேமநல நிதியை தற்போதுள்ள ரூ. 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தக் கோரி, ஊழல் நீதிபதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகவலை தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் கூண்டோடு போராடச் சென்றுவி்ட்டதால் நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதவை நீதிமன்றங்களை நேற்று முதல் 3 நாட்களுக்கு புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக வரும் ஜனவரியில் தொடர் போராட்டம் நடத்துவது குறி்தது வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தமிழகம் மற்றும் புதுவை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

****************************************************

சட்டத்தொழில் புரிவோர் (தொழில் தரத்தை நெறிப்படுத்தல் மற்றும் பேணுதல், வழக்காடிகளின் நலன் காத்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல்) சட்டம், 2010” (Legal Practitioners (Regulation and Maintenance of Standards in Profession, Protecting the Interest of Clients and Promoting the Rule of Law Act, 2010) இந்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கான‌ முக்கிய நோக்கமே, தற்போது அறைகுறையாக அதிகாரவர்க்கத்தின் பிடியிலுள்ள நீதித்துறையை முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதாகும். அந்த வகையில் இது எதிர்க்கப்படவேண்டியதே.

தற்போது வழக்கறிஞர்கள் எனும் சொல்லையே பெரும்பாலும் அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இது தவறான சொல். வழக்குறைஞர்கள் என்பதே சரியானது. அவர்கள் வழக்கின் அறிஞர்களல்ல, வழக்கை உரைப்பவர்கள் எனவே வழக்குறைஞர்கள் என்பதே சரியான சொல்லாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: