இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) வேண்டுகோள்

31 டிசம்பர்

மக்கள் பணி செய்வது சதி அல்ல !!
மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது தேசத் துரோகம் அல்ல !!

மக்கள் பணம் பல கோடி ரூபாய்களை கொள்ளையிட்டுக் குவித்து வரும் சுருட்டல் பேர்வழிகளே உண்மையான சதிகாரர்கள் !!

நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு விற்று வரும் கொள்ளைக் கும்பல்கள்தான் தேசத்துரோகிகள் !!
ஜனவரி 2 தொடங்கி ஒரு வார காலம் எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடிப்பீர் !!

டாக்டர் பினாயக் சென், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் நாராயண் சன்யால், வணிகரான பியுஷ் குகா ஆகியோர் தேசத்துரோகம் செய்த குற்றத்திற்காக ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தா எட்டாண்டு காலம் சிறை வாசம் விதிக்கப் பட்டுள்ளார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படியும் (IPC), சத்திஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டம் (CSPA), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகிய சட்டங்களின் கீழ் பொய்யான குற்றங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது. பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தாவிற்கு அதே தேதியில் வேறு ஒரு நீதிபதி எட்டாண்டு தண்டனை வழங்கி உள்ளார். இவ்விரு தீர்புகளும் ஏற்கனவே அரங்கேறிய பாசிச அடக்குமுறை அநீதிகளின் தொடர்ச்சியாகும்.

தான் உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ளும் இந்திய அரசு மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால், வணிகர் பியுஷ் குகா, மருத்துவர் பினாயக் சென் ஆகியோருக்கு வழங்கியுள்ள அநீதியான தீர்ப்பு வெட்கக்கேடான ஒன்று. பாசிசக் குற்றக் கும்பலான ‘சல்வா ஜ்டும்’ செய்து வரும் அட்டுழியங்களை வெளிக் கொண்டு வந்து மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதே பினாயக் செய்த குற்றம். 2007 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பிணை வழங்கப்படாமல் சிறை வைக்கப்பட்டு இருந்த மருத்துவர் பிநாயக்கை ஆதரித்து அறிவாளிகள், நோபெல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலராலும் இந்த பொய் வழக்கு கண்டனம் செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு வழங்கிய தண்டனை பிற அறிவுலகத்தினருக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

உலகின் பல மொழிகளில் வெளியாகி வரும் ‘வெல்வதற்கோர் உலகம்’ (A WORLD TO WIN) என்ற சர்வதேசப் பத்திரிகையின் இந்திப் பதிப்பாசிரியரான ஆசித் சென்குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டு இருக்கும் தண்டனை. மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்பதே அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம்.

சமீபத்தில், முதல்வர் ராமன் சிங், மாநிலப் போலீஸ் துறைத் தலைவர் விஸ்வரஞ்சன், போலீஸ் ஐ.ஜி.யான லோங்கெ குமர், எஸ்.பி யான கல்லூரி ஆகியோர் கூட்டாக ‘தந்தேஸ்வரி மாதா ஆதிவாசி சுயாபிமான் மஞ்ச்’ என்ற பெயரில் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து உள்ளனர். பிரபல பத்திரிகையாளர்களான எஸ்.ஆர்.கே.பிள்ளை, அனில் சர்மா, யஸ்வந்த் ராய், மற்றும் காந்தியவாதியான இமான்சு குமார், ஜனநாயகவாதிகளான அருந்ததி ராய் போன்றோரைக் கொலை செய்யப் போவதாக துண்டறிக்கை மூலம் அறிவித்து உள்ளனர். இதுதான் இவர்கள் பீற்றிக் கொள்ளும் சட்டத்தின் ஆட்சி.

73 வயதான தோழர் நாராயண் சன்யால், 1968 ம் ஆண்டு முதல் புரட்சி இயக்கத்தில் இனைந்து செயல் பட்டு வருகிறார். இந்திய ஏழை மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக பொதுவுடைமை இயக்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நோயுற்றுத் தனிமை சிறைகளிலும், விசாரணைக் கொட்டடிகளிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி- மன்மோகன் சிங்- சிதம்பரம- ராமன் சிங் அமைத்துள்ள பயங்கரவாதக் கூட்டணி பல மாவோயிஸ்ட் தலைவர்களைப் படுகொலை செய்துள்ளது, மேலும் பலரை நீண்ட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தி கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக:

2010ம் ஆண்டு, ஜூலை மாதம் சத்திஸ்கர் நீதிமன்றம் கட்சியின் செயல்வீரர் மாலதி என்ற சாந்திப்ரியாவையும் சுரேந்திரா என்ற ஆதரவாளருக்கும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளது. அவர்கள் செய்த குற்றம்: சட்டசபை உறுப்பினர்களுக்கு மாவோயிஸ்ட் கொள்கை விளக்க கம்பபியுட்டர் சி.டி. களை தபாலில் அனுப்பியது !!.

கட்சியின் தலைமை குழு உறுப்பினரான அமிதாப் பக்சியையும் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினரான கார்த்திக் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது. இந்த ஆண்டு, அக்டோபர் 29 ம் தேதியன்று, பாண்டுரங்க ரெட்டி என்ற தோழரை சந்திரபாபு நாயுடுவை தாக்கியதான வழக்கில் பொய்யான சாட்சிகள் அடிப்படையில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
இதே போல, எமது தோழர்கள் பலர் முறையற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு செய்யாத குற்றங்களுக்கு கொடிய மரண தண்டனை உட்பட ஆயுள் தண்டனை போன்ற நீண்ட சிறை வாசங்களை அனுபவித்து வருகின்றனர்.

மூத்த தோழர்களான கோபத் காந்தி, சுசில் ராய் போன்றோர் சிறைகளில் கொடிய நோயுடனும் முதுமையுடனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தோழர்கள். சோபா, பட்டிப்பவன் ஹல்தார், பிரமோத் மிஸ்ரா, விஜய், அசுதோஷ், பால்ராஜ், சிந்தன், பீமன், பிதான், சந்தி, சர்க்கார், பாலகணேஷ், ஜித்தேன் மாரண்டி போன்றோர் பொய் வழக்குகளில் பல ஆண்டுகளாக தண்டனை இன்றியே சிறையில் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில், தோழர் சொப்பன் தாஸ் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைதாகி மருத்துவ வசதி வழங்கப் படாமல் சிறையிலே கொல்லப்பட்டார்.

மத்திய அரசு, டாட்டா, ஜிந்தால், எஸ்ஸார், மிட்டல், போன்ற நிறுவனங்களுக்காக செயல்பட்டு மாவோயிஸ்டு இயக்கத்தை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் எதிரியாக அறிவித்து உள்ளது. கடந்த, 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ (Operation Green Hunt) என்ற பெயரில் மிகப் பெரும் ராணுவ தாக்குதலை பழங்குடியினர் வாழும் ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் நடத்தி வருகிறது.

இந்த அரசும் நீதி மன்றங்களும் தரகர்கள், ஊழலில் திளைத்து வரும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் இந்தியப் பணத்தை கொள்ளையிட்டு சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வருவதை ஏன் தேசத் துரோகம் என்று சொல்லி நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் ?

ஏழைகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும், விவசாயிகளுக்காவும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களையும், பொதுவுடமைப் புரட்சியாளர்களையும் தேசத் துரோக வழக்குகளைப் பயன்படுத்தி சித்திரவதை செய்து வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகளின் தாக்குதல் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் துணையோடும் ஆசிர்வாதத்தோடும் நடத்தப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளை மட்டுமே தாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் தேசிய இனப்போராளிகளையும் ஒடுக்கி வருவது கண்கூடு.

எனவே, எமது கட்சி அனைத்துப் பிரிவினரையும் ஒற்றுமையுடன் இருந்து இந்த தாக்குதலை எதிர் கொள்ள அழைப்பு விடுக்கிறது.

இதே எதிர்ப்புரட்சி நீதிமன்றங்கள் இதுவரை ஹிந்து தீவிரவாதிகள் நடத்திய அஜ்மீர் தர்க்கா தாக்குதல், 175,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல, ஆதர்ஷ் கட்டிட ஊழல் போன்ற பெரும் வழக்குகளை ஏன் விசாரிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது?

அதே வேளையில், புரட்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காஷ்மீரிகள் விவசாயிகள் இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளை விசாரிப்பதாகச் சொல்லி அதிக பட்சத்தண்டனைகளை வழங்கி வருகிறது.

எமது கட்சி, அனைத்து விதமான கொடுங்கோல் சட்டங்களையும் நீக்கி ஜனநாயக உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டி அனைத்துப் பிரிவினரும் போராட வருமாறு கேட்டுக் கொள்கிறது.

எமது இயக்கம், சர்வதேசத் தொழிலாளர் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் கடந்த காலத்தில் மக்கள் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து அரும்பணி ஆற்றி இருக்கின்றன. இப்போதும் அதே பணியை விரைந்து முன்னெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.

மருத்துவர் பினாயக் சென் உள்ளிட்ட மனித உரிமைப்போராளிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என இதன் மூலம் அறைகூவல் விடுக்கிறது.

எதிர்வரும் ஜனவரி 2ம் தேதி முதலான ஒரு வார காலம் ஆர்வலர்கள் அனைவரும் நமது எதிர்ப்பு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது. இந்த எதிர்ப்பு வாரம் கடையடைப்போ அல்லது ரயில் பஸ் மறியல் நடவடிக்கைகளோ அல்ல. மாறாக, தனி நபர்கள், இயக்கங்கள், ஆர்வலர்கள், அரங்கக் கூட்டங்கள் மூலம், பத்திரிகையாளர் சந்திப்புகள், கொடும்பாவி எரிப்புகள், கையெழுத்து இயக்கங்கள், பேரணிகள், கருப்பு கொடி ஊர்வலங்கள் நடத்தி அதன் மூலம் சத்தியமான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.

எமது கட்சியின் உறுப்பினர்கள், பணியாளர்கள், மக்கள் விடுதலைப் படையினர், கட்சியுடன் இணைந்த மக்கள் திரள் இயக்கங்கள் சாத்தியமான அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளையும் நடத்தி மக்களை அணி திரட்ட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இங்ஙனம்,

அபய்,

அதிகாரப் பூர்வ பேச்சாளர் .
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: