முல்லைப் பெரியாறு: மீண்டும் முருங்கை மரத்தில் கேரளா

1 ஜன

முல்லைப் பெரியாறில் பழைய அணைக்கட்டை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக புதிய உத்தரவுகள் எதையும் ஏற்க முடியாது என, கேரள அரசு முடிவு எடுத்துள்ளது.

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அருகே முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து கிடைக்கும் நீர் மூலம், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அணை பலமிழந்து விட்டதாகவும், அது உடைந்தால் கேரளாவில் பல மாவட்ட மக்களும் ஏகப்பட்ட பொருள் சேதமும் ஏற்படும் என்றும் கூறி, பழைய அணைக்கட்டு அருகே கேரள அரசு புதிய அணைக்கட்டு கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நியமித்த உயர்மட்ட கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. இக்கமிட்டி முல்லை பெரியாறு அணைக்கட்டு பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது. பழைய அணைக்கட்டு உடைந்து விடாமல் தடுக்க, அதை புதுப்பிக்க வேண்டும் என்ற கருத்தை கமிட்டியில் சிலர் எடுத்துள்ளனர்.இதுகுறித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

ஆலோசனையில், சுப்ரீம் கோர்ட் நியமித்த கமிட்டி, பழைய அணையை புதுப்பித்த பிறகு தான் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியும் என உத்தரவு பிறப்பித்தால், அதை ஏற்கக் கூடாது என்றும், ஏற்கனவே சீரமைத்த அணையை மீண்டும் புதுப்பிக்க இயலாது என்றும், புதிய அணை கட்டுவது ஒன்று தான் ஒரே தீர்வு என்றும் தீர்மானித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

**********************************************************

முல்லைப்பெரியாறு அணையை உடைத்துவிட்டு புது அணைதான் கட்ட வேண்டும் என்பதுதான் தொடக்கத்திலிருந்து கேரளாவின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. இதை எதிர்த்துத்தான் வழக்கும், ஐவர் குழுவும். ஆனால் ஐவர் குழு என்ன பரிந்துரைத்தாலும் புதிய அணை என்பதைத்தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பரிந்துரைக்கும் முன்பே ஆலோசிப்பதும் அறிவிப்பதும் அவர்களின் அடாவடியை காட்டுகிறது. இதையே அவர்கள் நிலைப்பாடாக எடுத்தால் தமிழகத்தின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: