இலவச தொலைக்காட்சிப் பெட்டி, கடையநல்லூரில் சாலைமறியல்

2 ஜன
கடையநல்லூரில் பாரபட்சமாக இலவச கலர் டிவி வழங்குவதாக குற்றம் சாட்டி பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூரில் இலவச கலர் டிவி வழங்குவது குறித்து சரியாக திட்டமிடாததால் கடந்த சில மாதங்களாக குழப்பமும், காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்டில் 7,500 இலவச டிவிகள் வந்துள்ளன. அதற் கான டோக்கன்களை வருவாய் துறையினர் பொதுமக்களிடம் வழங்க முற்பட்ட போது தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டுமென பொதுமக்கள் பிரச்னையில் ஈடுபட்டதால் டிவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து அம்பை தொகுதியில் இலவச டிவி பற்றாக்குறை இருந்ததால் கடையநல்லூர் வந்த டிவிகள் அம்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து புதிய கணக்கெடுப்பு நடத்த பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ முயற்சி மேற்கொண் டார். இதில் 22 ஆயிரம் பேர் டிவி பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.

இந்நிலையில் கடையநல்லூருக்கு 15 ஆயி ரம் டிவி வந்திறங்கியது. இலவச டிவி விநியோகத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார். அப்போது முத்துகிருஷ்ணாபுரத்தில் தேமுதிகவினரும் பொதுமக்களும் தகுதியுள்ள அனைவருக்கும் டிவி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசாரும், தேமுதிகவினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 4 தேமுதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

1வது வார்டில் இருந்து டிவி விநியோகத்தை வருவாய் துறையினரும், நகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டனர். இதில் பலருக்கு டிவி கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்த தால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. நேற்று கடையநல்லூர் நகராட்சி 3வது வார்டு கிருஷ்ணாபுரம் திலகர் தெருவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் டிவி வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

*************************************************************
இலவசங்களுக்காக போராட்டமா? நம்முடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மறுப்பதற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய த‌ருணத்தில் இலவசங்களுக்காக போராடுவது வேதனையானது.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: