ஸ்பெல்ட்ரம்: எய்தவனை தப்ப‌விட்டு அம்பை எச்சரிப்பதால் என்ன பலன்?

10 ஜன

2 ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற 11 முக்கிய நிறுவனங்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்காமல் ட்ராய் மெத்தனம் காட்டியது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

2 ஜி உரிமங்கள் ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்துள்ளதால், அனைத்து நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என ஜனதா கடசித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இன்னொரு வழக்கு, அடிப்படை விதிகளை மீறி ஒதுக்கீடு பெற்ற 11 நிறுவனங்களின் 2 ஜி உரிமங்களை ரத்து செய்ய் வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்டிருந்தது.

நீதிபதிகள் ஜிஎஸ் சாங்வி மற்றும் ஏ கே கங்குலி அடங்கி பெஞ்ச் முன்பு இன்று காலை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதில் சுப்ரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், அனைத்து லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு மத்திய அரசுக்கும் தொலைத் தொடர்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது நீதிபதிகள். இன்னொரு பொது நல வழக்கில், விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை கோரப்பட்டது.

வோடஃபோன், டாடா, யுனிநார், வீடியோகானுக்கு நோட்டீஸ்…

இதில் வோடஃபோன், யூனிநார், எஸ்ஸார் சவுத், ஷ்யாம் டெலிலிங்க், டாடா டெலி சர்வீஸஸ், ஐடியா, லூப் டெலிகாம், எடி சாலட், வீடியோ கான் உள்ளிட்ட 11 பெரிய நிறுவனங்கள் எப்படியெல்லாம் விதிமுறைகளை மீறியுள்ளன என்று விளக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட 11 நிறுவனங்களின் 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸையும் ரத்து செய்வது குறித்து அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்குள் இந்த நிறுவனங்கள் தங்கள் பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மேலும் மத்திய தொலைத் தொடர்புத்துறை மற்றும் ட்ராய்க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்ராய்க்கு கண்டனம்:

தங்களது இந்த உத்தரவில் ட்ராயின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர் நீதிபதிகள்.

“வோடஃபோன், யூனிநார், எஸ்ஸார் சவுத், ஷ்யாம் டெலிலிங்க், டாடா டெலி சர்வீஸஸ், ஐடியா, லூப் டெலிகாம், எடி சாலட், வீடியோ கான் உள்ளிட்ட 11 நிறுவனங்களும் அடிப்படை விதிகளைக் கூட பூர்த்தி செய்யாமல் ஏலம் கேட்டுள்ளன. ஆனால் அவற்றை குறைந்தபட்சம் பரிசீலிக்கக் கூட முயற்சிக்காதது ஏன்? நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் உயர்ந்தபட்ச ஒழுங்குமுறை அமைப்பான ட்ராய் (TRAI) என்ன செய்து கொண்டிருந்தது? விதிமுறை மீறல் வெளிவந்த பிறகும் கூட இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

மேலும் இந்த 2 ஜி உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன என்பது குறித்து விளக்கப்பட வேண்டும் என்றும் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

*****************************************************

ஸ்பெக்ட்ரம், ஊழல் என எல்லோரும் பேசுகிறார்கள். அரசியல்வியாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்த ஊழலினால் பலனடந்தவர்களை, இதுபோன்ற ஊழல்களை எந்தக் கொள்கை தோற்றுவித்ததோ அந்தக் கொள்கையைக் குறித்து யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தவர்களோ மறைக்கிறார்கள். உண்மை தெளிய வேண்டுமா? கீழுள்ள கட்டுரையை படியுங்கள்.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: