கர்நாடகாவில் வன்முறை வெறியாடுபவர்கள் என்ன சொல்ல முனைகிறார்கள்?

22 ஜன

எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் உத்தரவிட்டதைக் கண்டித்து கர்நாடகத்தில் பந்த அறிவிக்கப்பட்டுள்லதால் பெரும் பதட்டம் நிலவுகிறது. பெங்களூர்  மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்படுகின்றன.

இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும்போக்குவரத்து  முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் நேற்று இரவு அனுமதி அளித்து உத்தரவு இட்டதைத் தொடரந்து அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்கே முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் இச்செயலுக்கு எதிர்ப்பு  தெரிவித்து நேற்று நள்ளிரவு பெங்களூரில் பஸ்களை எரித்தனர். இதனால், பெங்களூரில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

****************************************************

முதல்வரை மீது வழக்கு தொடுப்பதற்கு ஆளுனர் அனுமதித்ததை எதிர்த்து பந்த் நடத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? ஆளுனர் அனுமதி கொடுத்தது தவறு என்பதுதான். அதாவது முதல்வர் ஊழல் செய்யலாம் தவறில்லை, அதற்காக அவர்மீது வழக்கு தொடுக்க அனுமதித்ததுதான் தவறு. வழக்கமாக எல்லாக்கட்சி அரசியல்வியாதிகளும் தன்மீது வழக்கு நடந்துகொண்டிருந்தாலும் “குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதே தவிர குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படவில்லை”
என்று சவடால் அடிப்பது வழக்கம். தீர்ப்பளிக்கப்பட்டாலோ மேல்முறையீடு வாய்தா என்று காலங்கடத்துவதும் வழக்கம். ஆனால் அனுமதி வழங்கியதற்கும் பேரூந்தை நொறுக்குகிறார்கள் என்றால்…..

அரசையோ, காவல்துறையையோ எதிர்த்தல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக நாள்தோறும் பொதுமக்களுக்கு எதிராக பொய்வழக்குகள் தொடுக்கப்படுகிறன. ஆனால் இந்த அரசியல்வியாதிகள் மீது மெய்வழக்கு தொடுக்க அனுமதித்தாலே கலவரம் நடத்தி மிரட்டுகிறார்கள் என்றால்…..

நாங்கள் ஓட்டு வாங்கி வந்தது கொள்ளையடிக்கத்தான். அது எங்கள் உரிமை. அதை எதிர்த்தால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதைத்தான் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வருகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: