2ஜி உரிமங்களை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு: அப்படிப் போடு… போடு…

2 பிப்

Cellphone Tower

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் 2ஜி உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கலில் மோசடி நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அனைத்து 2ஜி உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பொது நலன் மனுக்களுக்கான மையம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிஏஜி அறிக்கை அடிப்படையில் உரிமங்களை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒருவேளை உரிமங்களை ரத்து செய்வதாக இருந்தாலும் கூட அதை சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 1ம் தேதி வரைக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். மேலும், உரிமங்கள் தொடர்பான மத்திய அரசின் எந்த முடிவும், இந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

************************************************

ஒரு விற்பனையில் ஊழல் நடந்திருக்கிறது என ஐயம் ஏற்பட்டாலே, அந்த விற்பனையை ரத்து செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால் அதை இவர்களால் ஒருபோதும் செய்யமுடியாது. அதை மறைப்பதற்காகத்தான் சிஏஜி யின் அறிக்கையின் அடிப்படையில் ரத்து செய்யமுடியாது என்கிறார்கள். சிஏஜியின் அறிக்கையின் அடிப்படையில் தான் விசாரணை நடக்கிறது, ராஜா கைது செய்யப்பட்டிருக்கிறார், ஆனால் விற்பனையை ரத்து செய்ய மட்டும் அது போதாது.

அரசியல் கட்சிகளையும், அமைச்சர்களையும் ஊழல்வாதிகளாக காட்டும் அரசு நிர்வாகம், அந்த ஊழலுக்கு தூண்டுகோலாக இருந்த, அந்த ஊழலினால் பலனடைந்த‌ ரிலையன்ஸ், அம்பானிகளிடம் புதிய தொலைத்தொடர்பு கொள்கையை வகுப்பது குறித்து ஆலோசனை கேட்கிறது. அதாவது அடுத்தமுறை எப்படி நடந்துகொண்டால் வெளியில் தெரியாமல் கொள்ளையடிக்கலாம் என திருடர்களிடம் ஆலோசனை கேட்பது தான் புதிய தொலைத்தொடர்பு கொள்கை. திருடனைக் கொண்டு சட்டம் உருவாக்குவது அதேநேரம் சட்டம் தன் கடமையைச் செய்யும் என சவடால் அடிப்பது.

சரிதான், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். சட்டத்தின் கடமை என்ன? ஊழல்வாதிகளைத் தண்டிப்பதா? காப்பாற்றுவதா?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: