வடகரை பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

3 பிப்

வடகரையில் மின்கட்டண வசூல் மையத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூரை அடுத்த வடகரையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக மின்வாரிய இளநிலை பொறியாளர் அலுவலகமும், மின்கட்டண வசூல் மையமும் செயல்பட்டு வந்தது.
இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மின்கட்டணம் செலுத்துவது மற்றும் அடிப்படை மின்தேவைகளை இந்த அலுவலகம் மூலம் பூர்த்தி செய்து வந்தனர்.

இந்நிலையில் இளநிலை பொறியாளர் அலுவலகத்தையும், வசூல் மையத்தையும் வடகரையை அடுத்த அச்சன்புதூரில் இன்று முதல் செயல்பட  அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு இப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 300 பேர் வடகரையில் உள்ள டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்தும் தென்காசி டிஎஸ்பி ஸ்டாலின், அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மின்வாரிய உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், “வடகரையிலேயே மின்கட்டண வசூல் மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளிக்கவே முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நன்றி: கடையநல்லூர்.நெட்

**************************************************

பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கமே மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதும், உள்ளடங்கிய கிராமப்புற‌ங்களுக்கும் கூட எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், லாப நோக்கற்று மக்கள் சேவை செய்யவேண்டும் என்பதற்காகவும் தான். ஆனால் தொடக்கத்திலிருந்தே அரசுகளுக்கு இந்த நோக்கம் இருந்ததில்லை. தற்போதோ இந்த நோக்கங்களை வெளிப்படையாகவே மீறிவருகிறது அரசு. தனியார்மயமே அரசின் கொள்கை. இதன் முக்கிய நிபந்தனையே தனியார் லாபத்திற்கு அரசு உத்திரவாதமளிக்க வேண்டும் என்பதே. அந்த அடிப்படையில் தான் கிராமப்புறங்களில் செயல்படும் கல்வி நிலையங்கள், மின் அலுவலகங்கள், தொடர்வண்டி நிலையங்கள் போன்றவற்றை பல்வேறு காரணங்கள் கூறி அருகிலுள்ள சிறு நகரங்களுக்கு மாற்றி வருகிறது. இப்படி சேவையை ஒருமுகப்படுத்தி குறுக்குவதன் மூலம் ஆட்குறைப்பு செய்து தனியார்களிடம் கைமாற்றிவிடும் போது அவர்களின் லாபத்தை உத்திரவாதப்படுத்துவது தான். இந்த நடவடிக்கைகளை அதன் உள்ளடக்கங்களுடன் புரிந்து மக்கள் தங்கள் வீரியமான எதிர்ப்பைக் காடுவதன் மூலமும், வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமும் தான் அரசை பணியவைக்க முடியும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: