எகிப்து: புதுத் தலையைக் காட்டி மக்களை ஏய்க்க நினைக்கும் ஏகாதிபத்தியங்கள்

5 பிப்

ImageShack, share photos, pictures, free image hosting, free video hosting, image hosting, video hosting, photo image hosting site, video hosting site

அமெரிக்க அதிபர் ஒபாமா எகிப்து அதிபரைத் தொடர்பு கொண்டு நாட்டில் நடக்கும் போராட்டத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் அமைதிக்கும், ஜனநாயகத்திற்கும் வழி வகுக்கும் வகையில் பதவி விலக வலியுறுத்தியுள்ளார். முபாரக் ஒரு நல்ல முடிவு எடுப்பார் என்று ஒபாமா நம்புகிறார்.

இது குறி்த்து ஒபாமா கூறியதாவது,

அதிபர் முபாரக் நாட்டின் மீது அக்கறை உள்ளவர். அவர் ஒரு தேசபக்தர். ஆட்சியில் உள்ளவர்களையும், நாட்டு மக்களின் கூக்குரலையும் கேட்டு அவர் ஆட்சி மாறுதல் குறித்து முடிவு எடுக்க வேண்டும்.

எகிப்தின் எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சி மாறுதல் ஏற்பட வேண்டும். ஜனநாயக முறை கொண்டு வர வேண்டும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடக்க வேண்டும், மக்கள் குறை கேட்கும் பிரதிநிதிகள் அரசு மலர வேண்டும்.

அடுத்த தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முபாரக்கே அறிவித்திருக்கிறார். மறுபடியும் பழை முறைகளுக்கே திரும்புவது ஒத்து வராது. அடக்குமுறை ஒத்து வராது. வன்முறையில் ஈடுபடுவதும் வேலைக்கு ஆகாது.

ஆட்சி மாறுதல் குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது என்று நினைக்கிறேன் என்றார்.

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் அஹமது அபௌல் கெய்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் துணை அதிபர் உமர் சுலைமானும், தலைமை ராணுவ அதிகாரிகளுடன் நாட்டின் நிலைமை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடக்கும்வரை முபாரக்கின் அதிகாரங்களை தற்காலிகமாக சுலைமானுக்கு கொடுக்க முடியுமா என்று ஆலோசனை நடந்து வருகிறது. அதன் மூலம் முபாரக் பெயருக்கு மட்டும் தான் அதிபராக இருக்கக்கூடும். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும், மக்களும் பிடிவாதமாக இருப்பதாலும் இந்த ஆலோசனை நடந்து வருகிறது என்று வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

***************************************************

அரபுலகில் தொடர்ந்து நடக்கும் மக்கள் எழுச்சியும் போராட்டங்களும் மேற்குலக ஏகாதிபத்தியங்களை கிலியடையச் செய்திருக்கின்றன. போராட்டங்கள் மட்டுமீறிச் சென்றுவிடாதிருக்க பலவாறாக முயல்கின்றன. முபாரக்கை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறொருவரைக் கொண்டுவருவதன் மூலம் மக்களை அமைதியடையச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன. இதற்காகவே ஐநாவிலிருந்து எல்பராதே வந்திறங்கியிருக்கிறார். போராடும் மக்கள் இவைகளைக் கண்டுணர்ந்து முறியடிக்க வேண்டும். தன்னெழுச்சியாக மக்கள் போராடத் தொடங்கியிருந்தாலும்  ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும், தலைமையும் எகிப்து மக்கள் விரைவில் உணர்வார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: