மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒரு ஐயம்

10 பிப்


இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்று இப்படி தெரிவிக்கிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

இன்று முதல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சரியான விவரங்களை வழங்குமாறு அனைவரையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களை பொருத்தவரை மதம் என்னவென்ற கேள்விக்கு முஸ்லிம் என்றே பதிலளித்து பதிவுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதுஇஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேன். இது பற்றிய விழிப்புணர்வை துண்டு பிரசுரங்கள், தெரு முனைப் பிரச்சாரங்கள், பள்ளிவாசல் அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டு்க் கொள்கிறேன். கண்ணியத்திற்குரிய இமாம்கள் இது குறித்து ஜும்ஆவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மன்னஞ்சல் அனுப்பிய காதிர் அலி அவர்களுக்கு நன்றி

 

இந்திய அரசியல் சாசனத்தில் ‘இந்து’ எனும் மதத்தைச் சேர்ந்தவர்கள் யார் எனும் கேள்விக்கு, யார் முஸ்லீம் இல்லையோ, யார் கிருஸ்தவர் இல்லையோ, யார் பார்ஸி இல்லையையோ அவர்களெல்லாம் இந்து என்கிறது. அதாவது ராமன் யார் எனும் எனும் கேள்விக்கு, யார் அப்துல்லா இல்லையோ, யார் ஆப்ரஹாம் இல்லையோ, யார் வாடியா இல்லையோ அவர்களெல்லாம் ராமன் என்பதுபோல் அயோக்கியமான வரையறை அது.

இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிகை மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காடு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 விழுக்காட்டிற்கும் அதிகம் என இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கையில், ஜவாஹிருல்லா அறிக்கையில் குறிப்பிடப்படும் அந்த விசயம் யாரோ சில அதிகாரிகளின் தவறாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சுட்டிக்காட்டியும் திருத்தப்படவில்லை. வரலாறு நெடுக பார்ப்பனியம் செய்துவந்திருக்கும் குளறுபடிகளை அறிந்திருப்பவர்கள் இதை “பார்ப்பனியச் சதி” என்றே அடையாளம் காண்பார்கள்.

இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாவர்கள், பாமரர்கள், மதம் எனும் கேள்விக்கு இஸ்லாம் என பதிலளித்தால், அது இந்து எனும் எண்ணிக்கைக்குள் சேர்ந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது.

மிகுந்த முதன்மைத்தனத்துடன் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய இதை வழக்காட நேரமில்லை என அலட்சியப்படுத்துவது தவறானது. இதை எதிர்த்து சரி செய்ய வேண்டியதும், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் இந்த விசயத்தை கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசரத் தேவையாகும். இஸ்லாமிய சமூகத்திற்காகவே தாங்களை அர்ப்பணித்துக் கொண்டிருப்பாதாக கூறிக்கொள்ளும் இயங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன…….?

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: