நூதனப் போராட்டமா? மக்கள் உரிமைகளை கேலி செய்வதா?

15 பிப்

கடையநல்லுர் நகராட்சி கொசுக்களின் நகரமாக விளங்குகிறது. இதனால் பொதுமக்களை காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

நகரில் பெருகிவரும் குப்பை மற்றும் அசுத்த கழிவுகள் கொசுக்கள் பெருகுவதற்கு காரணமாக உள்ளது. கொசுக்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகத்தில் ரூ.4 லட்சம் செலவில் வாங்கப்பட்ட கொசுமருந்து இயந்திரமும் செயலின்றி உள்ளது.

இந்நிலையில் இந்நகராட்சி பகுதியில் பெருகி வரும் கொசுக்களை ஒழிக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கொசு வலைகளை மூடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் முத்தையா தலைமையில் நகர செய லாளர் ரவிச்சந்திரன். மகாலிங்கம், அசோக், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட சுமார் 20 பேர் நகராட்சி இந்திரா நகரில் இருந்து ஊர்வலமாக வந்து நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

*******************************************************

கடையநல்லூரில் எந்தக் கட்சியையும் சேராத மக்களே தன்னெழுச்சியாக நகராட்சி முற்றுகை, சாலை மறியல் என வீரியம் மிக்க போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்க, தங்கள் கம்யூனிஸ்ட்கள் என அழைத்துக்கொள்ளும் இவர்கள் நூதனப் போராட்டம் என்ற பெயரில் மக்களின் துன்பங்களை, நகராட்சியின் அலட்சியத்தை காட்சிப் பொருளாக்கி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்த நூதனத்தை(!) காணும் ஒருவனுக்கு போராட்ட குணம் வருமா? விஜயகாந்த் படத்தில் வரும் வடிவேலு காமெடிக் காட்சியைப் போல் சிரித்து விட்டு நகர்ந்து விடுவார்கள். இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களா?

தாங்கள் போலிகள் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: