பூவரசிக்கு ஆயுள் தண்டனை, பூவரசன்களுக்கு……?

16 பிப்

சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசிக்கு, சென்னை கூடுதல் செஷன்ஸ் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி ஆனந்தலட்சுமி. இவர்களது மகன் ஆதித்யாவுக்கு மூன்றரை வயது. தனியார் நிறுவனத்தில், ஜெயகுமார் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் பணியாற்றியவர் பூவரசி. ஜெயகுமாருக்கும், பூவரசிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ள பூவரசி வற்புறுத்தியதாகவும், அதற்கு ஜெயகுமார் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி ஜெயகுமாரின் மகன் ஆதித்யாவை, பூவரசி அழைத்துச் சென்றார். பின், ஆதித்யாவை காணவில்லை. ஆதித்யா காணாமல் போனது குறித்து, எஸ்பிளனேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நாகை பஸ் நிலையத்தில் சூட்கேசில் சிறுவன் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் ஆதித்யாவை கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்ததாக, பூவரசியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது இச்சம்பவம்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசியின் ஜாமீன் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால், பூவரசி சிறையில் தான் உள்ளார். வழக்கை விரைந்து முடிக்க, செஷன்ஸ் கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, இவ்வழக்கில் அன்றாடம் விசாரணை நடந்தது. ஐகோர்ட் வளாகத்தில் உள்ள ஆறாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சேதுமாதவன், வழக்கை விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாவதி ஆஜரானார். நீதிபதி சேதுமாதவன் பிறப்பித்த உத்தரவு: பூவரசி மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுவனை கடத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. கொலை மற்றும் தடயங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், அதற்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சாதாரண சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகை ஒரு லட்சத்தில், 90 ஆயிரம் ரூபாயை ஆதித்யாவின் தாயாருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பு வழங்குவதை முன்னிட்டு, கோர்ட்டில் பூவரசி ஆஜர்படுத்தப்பட்டார். தீர்ப்பை வாசிக்கும் போது, பூவரசி சாதாரணமாக இருந்தார். மாலை ஆறு மணிக்கு கோர்ட்டில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோர்ட்டை விட்டு வெளியே வரும் போது, “குழந்தையை கடத்திச் சென்றது ஜெயக்குமாரின் பிசினஸ் பார்ட்னர் தான். அந்த விஷயத்தை மறைத்து விட்டனர்’ என்றார். அவரது வக்கீல் ஆனந்தகுமார் கூறும் போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம்’ என்றார்.

****************************************************

கடந்த ஆண்டில் மிகவும் அதிகம் பேசப்பட்ட சம்பவங்களில் இது முதன்மையானது. கொலைச் செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் படித்துக் கடப்பது வழமையானது தான் என்றாலும், ஒரு பெண் இந்த கொலையை செய்திருப்பது தான் பலரை கோபம் கொள்ளச் செய்தது. அந்தக் கோபத்தில் உணர்ச்சி இருந்த அளவுக்கு நியாயம் இருக்கவில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், செய்த கொலைக்கு பூவரசிக்கு இன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து நுகர்ந்து குப்பையைப் போல் வீசியெறிந்து இந்தக் கொலையைச் செய்யத்தூண்டிய ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை எப்படி நீதி என கூறமுடியும்?

முடிந்தால் இந்தக் கட்டுரை எழுப்பும் கேள்விக்கு பதில் கூற முயலுங்கள்

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: