மீனவர்களை கரை சேர்க்க விஜய் …. மக்கள் அத்தனை ஏமாளிகளா?

21 பிப்

 

தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். ‘சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்’, என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.

பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம்.

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.

அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.

என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.

உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்”, என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

******************************************

ஆச்சரியமாக இருக்கிறது. மக்களை இத்தனை ஏமாளிகளாக எப்படி கருத முடியும்?

என்ன இவரின் அடுத்த படத்தின் கிளைமாக்ஸில் இலங்கை கடற்படையோடு சண்டையிடப் போகிறாரா? தமிழர்களின் வாழ்வு குறித்தும் அந்த வாழ்வுக்கு அவர்கள் படும் துயரம் குறித்தும் என்ன தெரியும் இவருக்கு? ஆபாச நடிகைகளுடன் கட்டிப்புடி கபடி விளையாடிக் கொண்டிருந்துவிட்டு படம் ஓடவில்லை, படத்தை திரையிட சிரமம் தருகிறார்கள் என்றதும் தமிழர்கள் மீதும், மீனவர்கள் மீதும் அக்கரை வந்துவிட்டதோ. தமிழர்களின், மக்களின் மெய்யான பிரச்சனை குறித்து ஒற்றைச் சொல்லை உதிர்க்கமுடியுமா இவரால்? மீனவர்களைக் காக்க என்ன செய்துவிட முடியும் இவரால்?

அடப் பொறுக்கிகளா ……. இதைவிட நாகரீகமாய் ஏதும் சொல்லத் தெரியவில்லை எனக்கு

Advertisements

2 பதில்கள் to “மீனவர்களை கரை சேர்க்க விஜய் …. மக்கள் அத்தனை ஏமாளிகளா?”

  1. jegadeeswaran பிப்ரவரி 21, 2011 இல் 8:28 பிப #

    இதை நான் அமோதிக்கிறேன்..!!
    சொந்த பிரச்சினைகளை சமாளிக்க அப்பாவி இளைஞர்களை முட்டாளாக்கி அரசியலின் அடிச்சுவடும் தெரியாமல், மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் புரியாமல், ஊளையிடும் அடுத்த நரியின் ஆட்டம்.

  2. மாநார்எருமை பிப்ரவரி 22, 2011 இல் 11:59 முப #

    எதிர்காலத்தில் நாற்காலிக்கு இப்போதே அச்சாரம்.எம்.ஜி.ஆர்.என்றகோமாளி செத்தும்அந்த ஆளுபெயரைச்சொல்லி ஓட்டு வாங்க கூட்டம்இன்னும் அலையுதுல!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: