காங்கிரஸ், பிஜேபி ஓரணி; மக்களுக்கு எதிரணி

22 மார்ச்

கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கேபிள் செய்தி வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனையை மக்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா எழுப்பினார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

இந்திய ஜனநாயக வரலாற்றில் வாக்களி்கக எம்பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக இதுவரை செய்தி வெளியானதே இல்லை. இது ஜனநாயகப் படுகொலை ஆகும்.

இந்த குற்றச்சாட்டை பிரதமர் மன்மோகன் சிங் மறுக்கவில்லையெனில் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இது இந்திய ஜனநாயகத்திற்கே பெருத்த அவமானம். இதுவரை நேர்மையான பிரதமர் என்று பெயரெடுத்தவர் ஆட்சியில் நடந்துள்ள விவகாரங்கள் எல்லாம் தற்போது தான் வெளிசத்திற்கு வருகின்றன. 2008-ம் ஆண்டில் 3 பாஜக உறுப்பினர்கள் லஞ்சப் பணத்தை இதே நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து காட்டியபோது அப்போதைய சபாநயகர் அதை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பதவியில் நீடிக்கும் உரிமையை அரசு இழந்துவிட்டது. எனவே, பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் அனுமதிக்க வேண்டும் என சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கேட்டுக்கொண்டார். அப்போது எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் கோஷங்கள் எழுப்பியதால் அவை நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களையிலும் அமளி ஏற்பட்டதால் அங்கும் அவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

**********************************************

மின்சாரத்திற்கான‌ அணு உலைகளுக்கு தோரியத்தைப் பயன்படுத்தலாம் எனும் ஆய்வில் இந்திய அறிவியலாளர்கள் முன்னேறியிருந்தும்,இந்தியாவில் ஏராளமான தோரியம் இருந்தும், அணு சக்தியால் கிடைக்கும் மின்சாரம் போதுமானதாக இருக்காது, சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும், இந்த ஒப்பந்தம் நாட்டையே அமெரிக்காவுக்கு விற்றுவிடும் என்பதை அறிந்திருந்தும் வம்படியாய் காலாவதியான தொழில்நுட்பத்துடன் கூடிய அணு ஒப்பந்தத்தை இந்திய செய்து கொண்டது. இதை எதிர்த்து இடதுசாரிகள் என தங்களைக் கூறிக்கொள்வோர் ஆதரவை விலக்கிக்கொண்டதால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பணம் கொடுத்து உறுப்பினர்கள் ஓட்டளிக்க வைக்கப்பட்டனர். இது காங்கிரஸ் வெர்சன்.

இதே பிரச்சனையில் மேடைகளில் அமெரிக்காவுக்கு எதிராக பேசிக்கொண்டாலும் தீர்மானம் போட்டாலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுக்கு எதிராக துரும்பையும் அசைக்க மாட்டோம் என்று அமெரிக்கத் தூதரிடம் உறுதி மொழி கொடுத்திருக்கிறார்கள். இது பாஜக வெர்சன்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கடைப்பிடிக்கும் கொள்கை ஒன்று தான். அமெரிக்காவுக்கு அடிமை தேசமாக இருப்பதற்கு மனப்பூர்வ ஒப்புதல். இதில் காங்கிரசும் பாஜகவும் எதிரெதிரான கட்சிகள் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாக் கட்சிகளுமே மக்களுக்கு எதிரான கட்சிகள் என்பது தான் நிஜம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: