தேர்தலை புறக்கணிப்போம்: கடையநல்லூரில் பெண்கள் அறிவிப்பு

22 மார்ச்

குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சீரான குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

நேற்று கடையநல்லூர் நகராட்சி 16, 30 மற்றும் 31வது வார்டுகளில் உள்ள பெண்கள் குடிநீர் வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து சீரான குடிநீர் விநியோகிக்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அப்போது அங்கு வந்த நகர்மன்ற தலைவர் காளிராஜிடம் பல மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக புகார் தெரிவித்தனர். நகராட்சி ஆணையாளர் அப்துல் லத்தீப் மேற்பார்வையிட்டு குடிநீர் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

****************************************************

கடையநல்லூரில் தண்ணீர் தட்டுப்பாடு மட்டும் வாடிக்கையான நிகழ்ச்சியல்ல. அதற்காக மக்கள் போராடுவதும், அதிகாரிகள் விரைந்து சரிசெய்துவிடுகிறோம் என வாக்குறுதி கொடுப்பதும், வாக்குறுதி கொடுத்த அடுத்த கணத்திலேயே அதை மறந்துவிடுவதும் கூட வாடிக்கையான நிகழ்ச்சி தான். ஆனால் தேர்தல் புறக்கணிப்பு என்பது கவன ஈர்ப்புக்காக மட்டும் பயன்படும் ஒன்றல்ல. மிகச்சரியான ஆயுதம் அது. அந்த ஆயுதத்தின் பயனை மக்கள் உணர்ந்தால் மாற்றங்கள் வெகு விரைவில் வரும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: