தோழர் ஸ்டாலினை தவறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை புறக்கணிப்போம்!

31 மார்ச்

கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘வெற்றி சரித்திரம்’. இதில் இரண்டாம் உலக போருக்கு வித்துட்டு கோடிக்கணக்கான மக்களை கொன்ற பாசிச ஹிட்லரை நல்லவன் போலவும், அவனுடைய பாசிசத்திலிருந்து உலகையே காப்பாற்றிய சோவியத் அரசு மீதும் அவ்வரசை தலைமை தாங்கி நடத்திய தோழர் ஸ்டாலின் மீதும் போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டு செல்கின்றனர்.

ஹிட்லர் என்ற பாசிச மிருகம் முன்னர் ஓவியனாக இருந்தது பின்னர் அவனுக்கு ஏற்பட்ட ஆசையால் (அதாவது பிரிட்டன், பிரான்ஸ் போன்ற காலனிபடுத்தும் நாடுகளையே தான் காலனி நாடுகளாக ஆக்க வேண்டும்) தான் இந்தியாவின் விடுதலை கூட சாத்தியமாயிற்று என்று ஹிட்லரை அணுஅணுவாக புகழும் இந்நிகழ்ச்சி உலகத்தின் முதல் சோசலிச அரசான சோவியத் யூனியனையும், அதன் தலைவரையும் சர்வாதிகாரி என்றும் லட்சக்கணக்கான மக்களை கொலை செய்தார் என்றும் இட்டு கட்டி செய்தியை அள்ளி விசிவிட்டு போகிறது.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என முடிவு செய்து முரசொலியில் இந்த ’யோக்கியகர்கள்’ எழுதி கிழிப்பது போல அல்ல வரலாறு என்பது. அது மக்கள் உயிர் ஓவியம்.

 

தோழர் ஸ்டாலின் என்ற மாபெரும் மக்கள் தலைவரையும், அவர் தலைமை தாங்கி உருவாக்கிய சோசலிச அரசையும் பற்றி அறிய பல்வேறு நாட்டு தலைவர்கள், எழுத்தாளார்கள் அங்கு சென்று வந்து எழுதியவற்றை கூடவா கலைஞர் படிக்காமலா இருந்து இருப்பார். நிச்சியம் படித்து இருப்பார். குறிப்பாக பெரியாரின் அனுபவத்தையும் படித்து இருப்பார். இதனால் தான் தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார் என்பது உண்மைதான்.

ஆனால் இன்று கார்ப்பரேட் நிறுவனமாக வளர்ந்து நிற்கும் முதலாளியான கருணாநிதிக்கு கம்யூனிச கொள்ளை தனது இருப்புக்கே ஆப்பு வைக்கும் என நன்றாக தெரியும். அதனால் தான் ஹிட்லர் ஹிரோவாகி விட்டார், தோழர் ஸ்டாலின் வில்லன் ஆகி விட்டார்.

தனது குடும்பத்தினரின் அதிகார, பதவி சுகத்துக்காக வாழும் கலைஞர் போன்ற சுயநல நோய்கள் வாழும் இன்றைய காலத்தில், “உலகை பாசிசத்திலிருந்து விடுவிக்க சொந்த வாழ்க்கையையும், சொந்த மகனையும் இழந்த தோழர் ஸ்டாலினை”  பற்றி உழைக்கும் மக்களாகிய நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் ஆன ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் இதே கலைஞர் தான் நமது வாழ்வாதரத்தை அழித்து இலவசங்களுக்காக அலைபவர்களாக நம்மை ஆக்கியவர்.

நமீதாவின் தொப்புள்ளை வெளிச்சமிட்டு காட்டி கல்லா கட்டும் கலைஞர் தான் , நமது தலைவரை இருட்டடிப்பு செய்கிறார்.

நம்முடைய் விடுதலையினை ஸ்டாலினுடைய கொள்கையை பற்றி நிற்கும் போது தான் அடைய முடியும்!

அதற்கு முதல் படியாக

தோழர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை நாம் புறக்கணிப்போம்!

நன்றி: அதிகாலை இளமாறன்

Advertisements

2 பதில்கள் to “தோழர் ஸ்டாலினை தவறாக சித்தரிக்கும் கலைஞர் டிவியை புறக்கணிப்போம்!”

  1. S.Ibrahim நவம்பர் 6, 2011 இல் 7:01 முப #

    ஹிட்லரோ ஒரு கன்னத்தில் அடித்தால் காட்டுங்கள் என்று சொன்ன கருனைகடல் ஏசுபிரானை சித்ரவதை செய்து இரக்கமின்றி கொன்ற ,தன்னை கொடுமை படுத்திய வர்களித்தான் கொன்றான்.ஆனால் தங்களது தலைவர் ஸ்டாலின் தனது கொள்கையை கிண்டல் செய்தவர்களை கூட விட்டு வைக்கவில்லை .இரும்புத்துரை ஆட்சி செய்தவரின் கொடுமைக்கு ஆதாரம் இருக்காது என்ற தையிரியத்தில் அவரை புரட்சி காரராக நிலை நிருத்தப்பார்த்தால் உலகம் அதை ஏற்றுக் கொள்ளாது.

  2. nallurmuzhakkam நவம்பர் 6, 2011 இல் 11:46 முப #

    உங்களைப் போன்ற மதவெறி பிடித்த புரட்டுக் கும்பலின் பொய்யை வரலாறாக்கும் இழி திட்டங்கள் ஒருபோதும் பலிக்காது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: