மீண்டும் நல்லூர் முரசு இதழ் வெளிவருகிறது

1 ஏப்

கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிவராமல் நின்று போயிருந்த “ந‌ல்லூர் முரசு” வார இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. கடையநல்லூரிலிருந்து சில மத இதழ்களும் ஒரு பெண்கள் இதழும் வெளிவந்து கொண்டிருந்தாலும், சமூகத்தளத்தில் செய்திகளைத் தாங்கி அச்சு இதழ்கள் எதுவும் வெளிவரவில்லை. அந்த இடைவெளியை நிரப்பும் வண்ணம் நல்லூர் முரசு வெளிவந்து கொண்டிருந்தது. நிர்வாக காரணங்களால் அது நின்று போயிருந்து, தற்போது மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

பழைய நல்லூர் முரசு இதழில் வாராந்திர செய்திகளும், சமூக, அரசியல் கட்டுரைகளும், கதை, கவிதை போன்றவற்றை உள்ளடக்கி இலவசமாக வெளிவந்தது. ஒரு அச்சு இதழை நடத்துவதிலுள்ள சிரமங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே என்றாலும், அதில் இருந்த குறை விளம்பரம் தருபவர்களுக்கு ஏதுவான செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிடுவது.

பழைய இதழின் அதே குறை, புதிய இதழிலும் தொடர்கிறதோ என எண்ணும் வண்ணம் அதன் முதல் வெளியீடு இருக்கிறது. இதை நீக்கி சமூக விழிப்புணர்வை நோக்கி நடைபோடும் போது மிகச்சிறப்பாக அமையும், அமைய வேண்டும்.

புதிய நல்லூர் முரசு இதழ்

இதில் “விலைவாசி உயர்வு தீர்வு என்ன?” எனும் கட்டுரையை சேயன் இப்ராஹிம் அவர்கள் எழுதியுள்ளார்கள். அதில் விலைவாசி உயர்வுக்கான முழுமுதல் காரணத்தை தொடவே இல்லை. மட்டுமல்லாது எது விவசாயத்தை அழித்ததோ அதையே அதையே விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான தீர்வாகவும் கட்டுரையாளர் முன்வைத்திருக்கிறார். இது அறிந்தே கூறப்பட்டதா அல்லது அறியாமையினாலா எனும் கேள்வியைவிட அபாயகரமானது என்பதால், அதன்மீது விமர்சனம் அவசியமாகிறது. சுருக்கமாக பார்ப்போம்.

விலைவாசி உயர்வுக்கான காரணங்களை மேலோட்டமாக கட்டுரையாளர் கடந்து செல்கிறார். ஊக வணிகம் என்பது விலைவாசி உயர்வுக்கான காரணங்களில் ஒன்று. சில பொருட்களுக்கு விலக்கு அளித்திருந்தாலும், விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வேறு காரணங்களால் விலை உயர்கிறது. விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களும் விலை உயர்கிறது என்பதால் ஊக வணிகம் காரணமல்ல என்று கூறமுடியாது. பல காரணங்கள் ஒன்று சேர்ந்து நிகழ்வதில் ஒரு காரணத்தை மட்டும் தனிமைப்படுத்தி பார்த்து அது இல்லை என்று கூறவோ விலக்களிக்கவோ முடியாது. உற்பத்தியிலும், நுகர்விலும் எந்த பங்களிப்பையும் செய்யாத ஒரு கூட்டம் கணிணி முன் அமந்து விலையை தீர்மானிப்பது எந்த விதத்தில் விளைச்சலுக்கோ, நுகர்வுக்கோ உதவும் என்பதை சிந்தித்தாலே விலைவாசி உயர்வுக்கு ஊக வணிகம் எந்த அளவுக்கு தூண்டுதலாய் இருக்கிறது என்பது விளங்கும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு முழு முதற் காரணமல்ல என்பதால் விலைவாசி உயர்வில் அதன் பங்களிப்பை மறுக்கமுடியுமா? விலக்கின்றி அனைத்து பொருட்களின் விலை உயர்விலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை பாமரர்களும் அறிந்திருக்கையில் எந்த விளக்கமுமின்றி பெட்ரோல் விலைஉயர்வு காரணமல்ல என்பது ஏற்புடையதா?

இப்படி காரணமில்லை என கூறி தாண்டிச் செல்லும் கட்டுரையாளர் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று குறிப்பிடுவது கொள்முதல் விலை உயர்த்தபடுவதை. வேடிக்கையாக இருக்கிறது. கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயி நிலத்தை தரிசாக போட்டு வைத்திருப்பதையும், வந்த விலைக்கு விற்றுவிடுவதையும் அறிந்துவைத்திருக்கும் கட்டுரையாளர், விவசாயி ஏன் கொள்முதல் விலையை உயர்த்தக் கோருகிறான்? என்பதை சிந்திப்பதற்கு எது தடையாக இருக்கிறது. பசுமைப் புரட்சி குறித்த அவரின் மதிப்பீடும் இங்கு தான் இடறுகிறது.

விவாசயம் இந்தியாவில் நிலிந்து கொண்டே செல்வதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று, அரசு கொள்கைகள் விவசாயத்தை புறக்கணிப்பது, இரண்டு விவசாய இடுபொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. இந்த இரண்டும் விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து அன்னியப்படுத்தி அதை பெரு நிறுவங்களின் கைகளில் திணித்திருக்கிறது. இதை சாத்தியப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது தான் பசுமைப் புரட்சி திட்டம். இதன்படி இயற்கை சார்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருந்த விவசாயத்தை உரங்களின் தயவில் நடக்க வேண்டிய ஒன்றாக மாற்றி, உற்பத்திச் செலவை எகிர வைத்ததுடன் நிலத்தையும் மலட்டுத்தன்மையுடையதாக மாற்றியது. விவசாய உரங்களுக்கு மாறுமாறு விவசாயிகளை வற்புறுத்திய அரசு, பின்னர் உணவு தானியங்களைத் தவிர்த்து லாபப் பயிர்களான தோட்டப் பயிர்களுக்கு மாறுமாறு அறிவுரை கூறியது. பின்னர் காட் ஒப்பந்தத்தின் பேரில் தண்ணீரை தனியார்மயப் படுத்தி விவசாயிகளின் வயிற்றிலடித்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பய்ன்படுத்தச் சொல்லி விளம்பரம் செய்ததை கேட்டு அதை மறு சுழற்சி செய்யமுடியாமல் விவசாயி கடனில் வீழ்ந்தான். 90களுக்குப் பிறகு மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து மாண்டிருக்கிறார்கள். இன்றோ சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக அடிமாட்டு விலைக்கு நிலத்தை விற்றுவிட்டு கூலி வேலை செய்து வயிறைக் கழுவுகிறான் விவசாயி. கொள்முதல் விலையை அதிகரிக்க கோருவதன் பின்னாலிருக்கும் இந்த சதித்தனங்களையெல்லாம் காணாமல் கண்ணை மூடிக் கொண்டுவிட்டு பாதிக்கப்பட்டு நிற்கும் விவசாயியின் மீதே பழியையும் சுமத்துவது அறியாமையா? முதலாளிய சதித்தனங்களுக்கான ஆதரவா?

விலைவாசி உயர்வை பொதுமைப்படுத்திப் பார்த்தால் மக்கள் வாங்கியே தீர வேண்டிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்வதும், மக்களை வாங்க வைத்தாகவேண்டும் எனும் நிலையிலிருக்கும் செல்போன், கணிணி உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களின் விலை குறைந்து கொண்டே செல்வதும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? எது காரணம்? என்பதை.

Advertisements

2 பதில்கள் to “மீண்டும் நல்லூர் முரசு இதழ் வெளிவருகிறது”

  1. abdulpasith நவம்பர் 6, 2011 இல் 12:52 முப #

    portal.opera.com/portal/mobile/

Trackbacks/Pingbacks

  1. மீண்டும் நல்லூர் முரசு இதழ் வெளிவருகிறது | Kadayanallur.org - ஏப்ரல் 5, 2011

    […] நல்லூர் முழக்கம் Share this:FacebookEmail […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: