தமிழக வேட்பாளர்களில் 125 பேர் மட்டுமா குற்றப்பின்னணி உடையவர்கள்?

7 ஏப்

தமிழக சட்டசபைத் தேர்தலில் கிரிமினல் பினனணியுடன் கூடிய 125 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிக அளவிலான கேஸ்களுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 பாஜக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த தலா 2 வேட்பாளர்கள், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாகப்பட்டனம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீதும், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

*******************************************************

தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் அவர் எந்த கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் சாராதவராக இருந்தாலும் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி தமக்கு என்ன லாபம்? தன்னுடைய முன்னேற்றத்துக்கு அது எந்த விதத்தில் உதவும் என்பதை கணக்கிட்டே கோடிக்கணக்கில் செலவு செய்து போட்டியிடுகின்றனர். ஆனால் கூறுவதோ மக்கள் நலனுக்காக போட்டியிடுவதாக. மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்து தன்னுடைய சொத்துக்களை பெருக்கிக் கொள்வதைவிட வேறென்ன கிரிமினல் தனம் மிச்சமிருக்கிறது? கிரிமினல்களின் கூடாரத்தில் ஓரிருவரை தேர்ந்தெடுத்து இவர்கள் கிரிமினல்கள் என்று கூறும் போது அது மற்றவர்களை பாதுகாக்கும் செயலாகும்.

Advertisements

ஒரு பதில் to “தமிழக வேட்பாளர்களில் 125 பேர் மட்டுமா குற்றப்பின்னணி உடையவர்கள்?”

Trackbacks/Pingbacks

  1. தமிழக வேட்பாளர்களில் 125 பேர் மட்டுமா குற்றப்பின்னணி உடையவர்கள்? | Kadayanallur.org - ஏப்ரல் 7, 2011

    […] பதிவு: நல்லூர் முழக்கம் Share […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: