கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகளுக்கு ஒரு சவுக்கடி

18 ஏப்

கடந்த சில நாட்களாக கடையநல்லூரில் ஒரு செய்தி சுற்றி வந்துகொண்டுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண் ஓடிப்போய்விட்டாள் எனும் அந்தச் செய்தி; நச்சுள்ளம் கொண்டவர்களாலும், ஆணாதிக்கவாதிகளாலும் சொந்தச் சரக்குகளை இணைத்து கிளுகிளுப்பிற்காக விவாதிக்கப்படும் அந்தச் செய்தி; கடையநல்லூரில் பெண்கள் இருக்கும் நிலையை தெள்ளென வெளிக்காட்டுகிறது.

படிப்பது, விருப்பப்பட்ட துணிவகைகளை, அணிகலன்களை எடுத்துக்கொள்வது இவைகளையே பெண்களுக்கான சுதந்திரமாய் காட்டி பீற்றிக் கொள்ளப்படும் இந்த ஊரில் ஒரு பெண் துணிவுடன் சொந்த மணவாழ்க்கை குறித்த தன்னுடைய நிலையை வெளிப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ஆனால் முடைநாற்றமெடுக்கும் ஆணாதிக்கமோ இதை ‘ஓடிப்போய்விட்டாள்’ என்று வம்பு பேசித் திரிகிறது.

அங்கன்வாடியில் பணிபுரியும் அந்தப்பெண் ஏப்ரல் 13 தேர்தல் நாளன்று தன்னுடைய பணிகளை முடித்துக்கொண்ட பிறகிலிருந்து காணப்பட‌வில்லை. ஒரு நாள் கழித்து தட்டச்சு செய்யப்பட்ட மடல் ஒன்று ஐந்து பேர்களுக்கு வருகிறது. அந்த மடலின் சுருக்கம்,

“கடந்த 12 ஆண்டுகளாக கணவனின் போக்கிலுள்ள கொடுமைகளையும் சிரமங்களையும் சுட்டிக்காட்டி எனக்கு மணவிலக்கு செய்து தாருங்கள் என என்னுடைய தகப்பனாரிடம் கோரிக்கை விடுத்து வந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கணவன் ஊர் வரும்போது என்னை சமாதானம் செய்து சேர்ந்து வாழச் செய்வது தொடர்கிறது. நான் எங்கும் ஓடிப்போய்விடவில்லை. என் தோழி ஒருவரின் வீட்டில் இருக்கிறேன். எனக்கு மணவிலக்கு செய்து தருகிறேன் என்று உறுதியளித்தால் உடன் நான் ஊர் திரும்புகிறேன்.”

இந்த மடல் ௧) தகப்பனார், ௨) கணவன் வீட்டார், ௩) தாய்மாமன், ௪) வட்டார நாட்டாமை, ௫) குடும்பத்தார்கள் ஆகிய ஐவருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தப்பெண்ணின் மடலில் பொதுவாக கொடுமைகள் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், கணவனின் சந்தேக புத்தி அந்தப் பெண்ணிற்கு மனதளவில் என்னவிதமான சித்திரவதைகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது புரிந்துகொள்ளக் கூடியது தான். வேலை செய்யும் இடத்திற்குச் சென்று எத்தனை மணிக்கு வேலைக்கு வரும்? வேலை நேரத்தில் யாருடனெல்லாம் பேசும்? எத்தனை மணிக்கு வீடு திரும்பும் என்று விசாரித்து நிமிடக் கணக்குப் பார்த்து கேள்விகள் கேட்கும் கணவனுடன் வாழமுடியாது என்று மணவிலக்கு கோருவதும் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஆனால் இதை யாருடனோ ஓடிப்போய் விட்டதாக கதைகட்டி உலாவரச் செய்வதை என்னவென்று புரிந்து கொள்வது, ஆணாதிக்க வக்கிரம் என்பதல்லாது.

தற்போது வட்டார பஞ்சாயத்தில் அந்தப் பெண் திரும்பிவந்தால் வீட்டில் சேர்க்கக்கூடாது என்றும், நாளைக்குள் திரும்பி வராவிடில் காவல் நிலையத்தில் காணவில்லை என்று புகார் கொடுப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் புகாரளிப்பது என்பதை ஒரு வகையில் நடப்பு என்று கொள்ளலாம். திரும்பி வந்தால் வீட்டில் சேர்க்கக் கூடாது என்பதை என்னவென்பது?

வீட்டை விட்டு வெளியேறிவிட்டது என்பதை மட்டும் விவாதப்பொருளாக ஆக்கியிருப்பவர்கள், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பெற்றோரிடம் முறையிட்டும் முடிவு ஏதும் கிடைக்கவில்லை என்ப‌தை ஏன் மறந்துவிட்டார்கள்?

இவ்வளவு தீர்க்கமாக தீர்வு காண விரும்பிய அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் துணிவுடன், குடும்பத்தாரிடமோ, வட்டார பெரியவர்களிடமோ முறையிட்டிருக்கலாம். நேராக நின்று பிரச்சனையை எதிர்கொண்டிருக்கலாம். ஆனால் பெற்றோரிடம் முறையிட்டும் கிடைக்காத நீதி மற்றோரிடம் கிடைக்குமா என அந்தப் பெண் எண்ணியிருந்தால் அதை குறை காண முடியாது.

மெய்யாக இந்தப் பிரச்சனையில் யாரிடம் தவறு இருக்கிறது? யாரின் கூற்றில் மெய் இருக்கிறது? என்பதை விட‌ பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக காட்ட விரும்புகிறது இந்த சமூகம் என்பது தான் இந்தப் பிரச்சனையின் மையமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க சமூகத்தில், சாராம்சத்தில் அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பிய பெண் எனும் அடிப்படையில் நமது பாரட்டுதல்களும், ஆதரவும் அந்தப் பெண்ணுக்கு உண்டு.

Advertisements

3 பதில்கள் to “கடையநல்லூர் ஆணாதிக்கவாதிகளுக்கு ஒரு சவுக்கடி”

 1. hakkim ஏப்ரல் 21, 2011 இல் 5:17 முப #

  ungludaiya karuthu

 2. Mohideen ஏப்ரல் 26, 2011 இல் 4:35 பிப #

  WE HAVE TO KEENLY WATCHING AND CONTROL MOBILE PHONE RECHARGE BUSINESS PEOPLES ESPECIALLY HINDU BOYS

  MAIN BAZZAR

  1,MAYIL KADAI (KRISHNAPURAM MUDALIYAR KADALAI KADAI NATARAJAN ANNAN MAGAN)NEAR MADINA STORES,MAIN BAZAR,KDNL

  2.RAMESH NEXT TO MADINA STORES MAIN BAZAR KDNL AND HIS MUSLIM YOUTH FRIENDS

  3 KANTHI STD PUDHU BAZAR POOKADAI CHANDU OPP TO MUBHARAK MEDICALS KDNL

  • Mohideen ஏப்ரல் 26, 2011 இல் 4:36 பிப #

   AND SOME SOCIAL WORKERS AND LOCAL BUSINESS PEOPLES

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: