கேள்விக்கும் பதிலுக்கும் இடையிலுள்ள தூரம்

22 ஏப்

அண்மையில் கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் ’எஸ்.டி.பி.ஐ யிலிருந்து போட்டியிடும் கடையநல்லூர் தொகுதி வேட்பாளரான திரு முபாரக் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவிருக்கிறார்’ என்றொரு அறிவிப்பை வெளியிட்டு கேள்விகளை பதிவு செய்யுமாறு கோரியிருந்தார்கள். நாணும் என்னுடைய கேள்வியை பதிவு செய்திருந்தேன். அந்த கேள்வியும் முபாரக் அவர்களின் பதிலும் கீழே,

திரு முபாரக் அவர்களுக்கு,

இந்தியாவின் இரட்டை ஆட்சி முறை குறித்து உங்கள் கருத்தென்ன? பொதுவாக ஒரு வேட்பாளர் நான் வெற்றிபெற்றால் இதை செய்து தருவேன் என வாக்குறுதி கொடுப்பது மக்களிடமிருந்து ஓட்டை பெறுவதற்கான ஒரு உத்தி என்பதை தாண்டி ஒரு பயனும் இல்லாதது என்பது என்னுடைய கருத்து. அரசு நிர்வாக நடைமுறையில் எந்தவித பங்களிப்பையும் செய்துவிட முடியாத ஒரு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர், தேர்தல் வாக்குறுதி அளிப்பது ஒரு ஏமாற்று எனும் கருத்தை நீங்கள் எப்படி மறுப்பீர்கள்?

ஒரு நீண்ட நிலப்பரப்பை ஆட்சி செய்யும்போது நிர்வாக வசதிக்காக சில ஏற்பாடுகள் செய்வது, இரட்டை ஆட்சிமுறை என்பது அதில் ஒரு வகைதான்.

அடுத்து, எம்.எல்.ஏக்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் சும்மா? எந்த அதிகாரமும் அற்றது என்றால் அதற்கு எம்.எல்.ஏ என்ற பதவியே தேவையில்லையே! நீங்கள் ஆயிரம் மேடை போட்டு பேசினாலும் அரசின் கோப்புகளில் பதிவாகாது. ஆனால் ஓர் எம்.எல்.ஏவின் ஐந்து நிமிட பேச்சு என்பது அரசைப் பொருத்தவரை தவிர்க்க முடியாத ஒரு அம்சம். எனவே இந்த வாக்குறுதிகள் ஏமாற்று வேலை என்று சொல்வதை ஏற்க முடியாது. நிச்சயமாக அந்த பதவியின் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

ஒரு தொகுதியின் வேட்பாளராக நிற்கும் ஒருவர், அதாவது அவர்களின் நம்பிக்கைப்படி அரசு நிர்வாகத்தில் பங்கேற்க விரும்பும் ஒருவர் எப்படி சாரமற்று மேம்போக்காக இருக்கிறார் என்பதற்கு இந்த பதில் ஓர் எடுத்துக்காட்டு. இவர் மட்டுமல்ல வெகு சிலரைத் தவிர எல்லோருடைய நிலையும் இதுதான்.

இரட்டை ஆட்சி முறை என்பது நிர்வாக வசதிக்காக அல்ல மக்களை சுரண்டும் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. பதில் சொன்ன வேட்பாளருக்கு இரட்டை ஆட்சிமுறை என்பது குறித்த புரிதல் இல்லை. இந்திய அரசை நிர்வகிப்பது, அதன் செயல்களை தீர்மானிப்பது அரசு அதிகாரிகள். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதும் இல்லை, மக்களுக்கு பதில் சொல்லும் கடமையும் அவர்களுக்கு இல்லை. மாறாக அனைத்து அதிகாரமும் அவர்களிடமே குவிந்து கிடக்கிறது. இதற்கு நேர் எதிராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை ஓர் எடுத்துக்காட்டு மூலம் எளிமையாக விளக்கலாம். தற்போதைய இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்கும் அடிப்படையாக இருப்பது காட் ஒப்பந்தம். தொன்னூறுகளின் தொடக்கத்தில் காட் ஒப்பந்தம் அரசினால் அமல்படுத்தப்பட்டபோது மக்கள் பிரதிநிதிகளான எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் (எம்பி) அது தெரியாது. அதாவது இந்திய அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கை மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, அவர்களின் அனுமதியைப் பெறாமலேயே இந்தியாவில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இது தான் இரட்டை ஆட்சிமுறை என்பது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்து அதிகரத்தையும் தங்களிடம் வைத்திருக்கும் அதிகாரிகளோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

என்றால், வேட்பாளர் கேட்பதுபோல் எம்.எல்.ஏ என்றொரு பதவி இருக்கவேண்டிய அவசியமென்ன? இதற்கு நாம் சுதந்திரத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தியாவை இங்கிலாந்து தன்னுடைய காலனி நாடாக வைத்திருந்தது என்றால் அதன் பொருள் என்ன? தொழிற்புரட்சியின் விளைவால் உற்பத்தி செய்து குவிக்கப்பட்ட பொருட்களுக்கு சந்தை தேடித்தான் இந்தியாவில் நுழைந்தான் வெள்ளையன். ஒரு கட்டத்தில் நேரடியாக ஆட்சி செய்வது இனியும் லாபகரமாக இருக்காது என்றதும், மக்கள் தங்கள் சுதந்திரத்தை தானே தேடிக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக சுதந்திரம் என்ற பெயரில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதாவது நேரடியாக தாமே ஆள்வதற்குப் பதிலாக இந்தியர்களை ஆளவைத்துவிட்டு ஆட்சியின் சாதகங்களை தம்மிடமே தக்கவைத்துக் கொள்வது. இது தான் 1947ல் நடந்தது. ஆள்வது நம்மவர்கள் ஆனால், அதிகாரம் அவர்கள் கையில்; அப்போதுதான் அதை சுதந்திரம் என்று கூறிக்கொள்ள முடியும். நம்மை நாமே ஆள்கிறோம் எனும் எண்ணம் மக்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் மக்களுக்கு நாமே தேர்ந்தெடுத்து ஆள்கிறோம் எனும் எண்ணம் ஏற்படவேண்டுமென்பதனால் தேர்தல் இரட்டையாட்சிமுறை கொண்டுவரப்பட்டது. இந்த வகையில் ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு தரகுவேலை பார்ப்பதற்காகத்தான் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுகின்றனர். அன்று ஏகாதிபத்தியமாக பிரிட்டன் இருந்தது, அந்த இடத்தில் இன்று அமெரிக்கா. இவ்வளவுதான் வித்தியாசமேயன்றி வேறொன்றுமில்லை.

ஆயிரம் கூட்டம் போட்டு பேசினாலும் சட்டசபையில் ஐந்து நிமிடம் பேசுவதுதான் பதிவாகும் என்றும் கூறியிருக்கிறார். பேசுவது பதிவாவதால் மக்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள், அவைகள் பதிவும் ஆகியுள்ளன. முபாரக் அவர்களுக்கு ஆசையிருந்தால் அவைகளை ஒருமுறை பார்வையிட்டுக் கொள்ளட்டும்; முதலாளிகளுக்கு பாதகமான எதாவது ஒன்று பதிவாகியிருக்கிறதா என்று. நாம் நேரடியாகவே முபாரக் அவர்களிடம் கேட்கலாம், தமிழகத்தில் தொழில் தொடங்கிய நோக்கியா நிறுவனம் முதலீடு செய்த மொத்த முதலீட்டுக்கு ஈடான தொகையை ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகையாக தமிழகத்திலிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் இதை கேள்வியாக எழுப்பி இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியுமா முபாரக் அவர்களால்?

ஆக அலங்காரப் பதவிக்காக போட்டியிட்டு வெல்வதற்கு மக்களை மயக்கும் ஒரு வித்தைதான் தேர்தல் வாக்குறுதிகள். அதை நிறைவேற்றுவதும் முடியாமல் போவதும் அந்தந்த வாக்குறுதிகளின் அற்பங்களில் இருக்கிறதேயன்றி உறுப்பினர்களின் அதிகாரத்தில் இல்லை.

போதும் என நினைக்கிறேன். இதற்கு பதிலளிக்க முபாரக் அவர்கள் முன்வந்தாலோ, அல்லது விளக்கங்களை பெறுவதற்கு கடையநல்லூர்.ஆர்க் தள நிர்வாகிகள் முயற்சி செய்தாலோ இன்னும் விரிவாகவும் ஆழமாகவும் இதை விவாதிக்கவும் விவரிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்பது அனைவரின் கவனத்திற்கும்.

Advertisements

3 பதில்கள் to “கேள்விக்கும் பதிலுக்கும் இடையிலுள்ள தூரம்”

 1. kadirali ஏப்ரல் 23, 2011 இல் 10:26 முப #

  இவர் சொல்லும் அரசியல் வேறு முபாரக் சொல்லும் அரசியல் வேறு.
  முபாரக் அவர்களின் பார்வை நேர்மறை அரசியல். உங்களின் பார்வை எதிர்மறை அரசியல்.
  போகப்போக புரியும் SDPI இன் அரசியல் நிலைப்பாடு.

 2. nallurmuzhakkam ஏப்ரல் 27, 2011 இல் 9:25 முப #

  நண்பர் காதிர் அலி,

  இந்திய‌ அர‌சிய‌லில் நேர்மறை அர‌சிய‌ல் எதிர்ம‌றை அர‌சிய‌ல் என்றெல்லாம் பேத‌ங்க‌ள் உண்டா? உண்டென்றால் அது என்ன‌? எப்ப‌டி அது நான் பேசும் அர‌சிய‌லிலிருந்து வித்தியாச‌ப்ப‌டுகிறது? என்ப‌தை கொஞ்ச‌ம் விள‌ங்குங்க‌ள். பிற‌கு நாம் தொட‌ர்ந்து உரையாடுவோம்.

Trackbacks/Pingbacks

 1. கேள்விக்கும் பதிலுக்கும் இடையிலுள்ள தூரம் | Kadayanallur.org - ஏப்ரல் 26, 2011

  […] பதிவு: நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: