இறுதிப்போரும் விசாரணை அறிக்கையும்

27 ஏப்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய இறுதிப் போரில் 40000 தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர் என்றும், அனைத்து போர் விதிமுறைகளையும் அந்நாடு மீறிவிட்டதாகவும், போர் தொடர்பாக பொய்யான தகவல்களையே கூறி வந்ததென்றும் ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

 

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள பல தகவல்கள் ரகசியமாக வெளிவந்தன. இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

முன்பு வெளிவந்த அத்தனை தகவல்களுமே உறுதியாகியுள்ளது, இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பார்க்கும்போது.

இந்த அறிக்கையின் சில முக்கிய பகுதிகள்:

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஹ்களப் படை, விடுதலைப் புலிகள் இருதரப்புமே மனித உரிமைகளை மீறி போர் குற்றங்களைச் செய்துள்ளனர்.

பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் தெரிந்தே குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இதற்கு மேலும் கூட இருக்கலாம்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளை இலங்கை படைத் தரப்பு வீசியுள்ளது. இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது.

தமிழ்ப் பெண்களை மிகக் கொடூரமாக மானபங்கப்படுத்தியுள்ளது இலங்கை படைத்தரப்பு. கற்பழிப்புகள் சர்வசாதராணமாக நடந்துள்ளன. முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு

அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம்.

அனைத்துமே பொய்யான தகவல்கள்

இலங்கையின் இறுதிக் கட்டப் போர் குறித்தும், கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்தும், தமிழர் பாதுகாப்பு குறித்தும் இலங்கை சொன்ன அனைத்துமே பொய்யான தகவல்கள் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை

அதேபோல இறுதிப் போரின் போது, பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வந்த தமிழர்களில் 1 லட்சம் பேருக்கு மேல் காணவில்லை அல்லது கணக்கில் காட்டப்படவில்லை. இந்த எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் காட்டியுள்ளது.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்கள்

புலிகளின் முக்கியத் தலைவர்கள் சரணடைய வந்தபோது, அவர்களை சர்வதேச சட்டங்களை மீறி சுட்டும் சித்திரவதைப்படுத்தியும் கொன்றுள்ளது இலங்கைப் படை.

இசைப்பிரியா போன்ற ஆயுதமேந்தாத கலைஞர்களையும் சிவிலியன்களையும் மிக மோசமாக சிதைத்துள்ளனர் ராணுவத்தினர்.

தங்களிடம் பிடிபட்ட போராளிகள், குறிப்பாக பெண் போராளிகளை உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத அளவு கொடூரமான முறையில் கொன்று குவித்திருப்பது தெரிகிறது. சில பெண்களை கொல்லப்பட்ட பிறகு ராணுவத்தினர் கற்பழித்து சிதைத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவை மனித இனத்துக்கே எதிரான மிகப் பெரிய குற்றங்கள். இதற்கு சேனல் 4 மற்றும் பல ஊடகங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்கள் தகுதியான சான்றுகளே.

பட்டினியால் பல ஆயிரம்பேரைக் கொன்ற இலங்கை

போருக்குப் பின் சரணடைந்த தமிழர்கள் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே இலங்கை அரசு குறைத்துச்சொன்னது நிரூபணமாகியுள்ளது. இதனால், அன்றாடம் வழங்கப்படும் உணவு குறைந்துவிட்டதால், பல ஆயிரம் தமிழர்கள் பட்டினியாலும் கொடிய நோய்களாலும் இறந்துள்ளனர்.

-இப்படி இலங்கைக்கு எதிரான ஐநாவின் குற்றப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, மனிதகுலமே கண்டிராத கொடுமைகளை இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றியதையும், செய்து வருவதையும் எந்த தயக்கமும் இன்றி தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது ஐநா நிபுணர் குழு.

இப்போது சர்வதேச சமூகம் கேட்பது, என்ன செய்யப் போகிறது இந்தியா?, என்ற கேள்வியைத்தான்!

***********************************************

இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையிலிருப்பவைகள் யாருக்கும் தெரியாதவை என்றோ, முன்பு யாரும் கூறாதது என்றோ கூறமுடியாது. போர் நடந்துகொண்டிருக்கும் போதிலிருந்து அறிவுத்துறையினாராலும், புரட்சிகர இடதுசாரிகளாலும், தமிழின ஆர்வலர்களாலும் தொடர்ந்து கூறப்பட்டுக்கொண்டிருப்பவைதான். இந்த அறிக்கை அவர்கள் கூறி வந்ததை மெய்ப்படுத்தியிருக்கிறது. ஆனாலும் இவை முழுவதுமாக நிகழ்ந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்திவிடவில்லை. மட்டுமல்லாது இதுகுறித்து இலங்கை அரசையே விசாரணை நடத்தச் சொல்லியிருப்பதும் கேலிக்கூத்தானது. ஒரு வேளை வல்லரசு நாடுகள் விசாரிக்க முன்வந்தாலும் அதுவும் அவர்களின் வல்லாதிக்கத்திற்கு உட்பட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கும். அந்தவகையில் இந்த அறிக்கையும் கூட பலனளிக்காத ஒன்றுதான், இதுவரை அங்கு நடந்தது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று பிடிவாதமாக நம்பிக்கை வைத்திருந்தோரையும் பரிசீலிக்க வைத்திருக்கிறது என்ப்பதைத்தவிர.

ஐ.நாவின் அறிக்கை

Advertisements

ஒரு பதில் to “இறுதிப்போரும் விசாரணை அறிக்கையும்”

Trackbacks/Pingbacks

  1. இறுதிப்போரும் விசாரணை அறிக்கையும்  | Kadayanallur.org - ஏப்ரல் 27, 2011

    […] பதிவு: நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: