மின்பற்றாக்குறை கூடினால் அது இலவசங்களினாலா?

1 மே

தமிழகத்தில் போதிய மின் உற்பத்தி இல்லாததால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழ்நிலையில், சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளன.

அனைத்து குடும்பத்தினருக்கும் இலவசமாக மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்குவதாக அறிவித்துள்ளன. இதனால் மின் தேவை மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். தமிழகத்துக்கான மின் தேவையில், தற்போதுள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள் மூலம், 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் மின் உற்பத்தி போதவில்லை. இதனால் மேட்டூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சில மாதங்களில் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில், சாதாரண நாட்களில் 11 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்றால், கோடை காலங்களில் 11 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவை என கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால், பற்றாக்குறையை சமாளிக்க மின் வெட்டு அவசியமாகிறது. நகர்ப்புறங்களை விட கிராமங்களில் குறைவான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணம் கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் கிரைண்டர், மிக்சி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இல்லை. ஆனால், நகர்ப்புறங்களில் இந்த பொருட்கள் இல்லாத வீடே இல்லை. இதனால், இங்கு மின் தேவை அதிகரிக்கிறது.

தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மின்விசிறி, கிரைண்டர், மிக்சி என மூன்றையும் அறிவித்துள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த இலவச பொருட்கள் ஒரு கோடியே 70 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு செல்லும். ஒரு வீட்டில் மின் விசிறியை நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்துக்கு 15 யூனிட் மின்சாரம் தேவை. இதேபோல் கிரைண்டர் அல்லது மிக்சியை ஒரு மணி நேரம் பயன்படுத்தினால், ஒரு யூனிட் மின்சாரம் தேவை. இரு பொருட்களையும் மாதம் ஒன்றுக்கு 5 மணி நேரம் பயன்படுத்தினால், 5 யூனிட் மின்சாரம் தேவை. இதனால், குறைந்தது ஒவ்வொரு வீட்டின் மின் தேவையிலும் 15 முதல் 20 யூனிட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் 3.25 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். ஏற்கனவே மாநிலத்தில் ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில், இலவச அறிவிப்பால் மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்ற பயம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தொற்றிக் கொண் டுள்ளது.

********************************************

இது தினமலர் நாளிதழில் வந்திருக்கும் செய்தி. உள்நோக்கத்தோடும் வர்க்க பாசத்தோடும் செய்திகளை திரித்துப் பரப்புவதே ஊடகங்களின் தலையாய பணியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவைகள் வெளியிடுவதைக் கொண்டே நாட்டு நடப்பை தெரிந்துகொள்பவர்கள் முதலாளித்துவ தாசர்களாக அல்லாமல் வேறு எப்படி உருவாவார்கள்?

மிக்ஸி, தொலைக்காட்சிப்பெட்டி போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாதவர்களும் அவற்றை பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதைவிட அப்படி பயன்படுத்துவதன் மூலம் மின்பற்றாக்குறை அதிகரித்துவிடக்கூடும் என்பதுதான் அவர்களின் கவலையாக இருக்கிறது. இலவசப் பொருட்களின் தயாரிப்பு மூலம் பயன்பெறப்போவதும் முதலாளிகள் தான்; அரசியல் ரீதியாக மக்கள் விழிப்புணர்வடைவதை தடுக்கும் விதமாகத்தான் இலவசங்கள் வழங்கப்படுகின்றன போன்றவை ஒருபுறமிருந்தாலும் ஏழைகள் பயன்படுத்துவதால் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் என கவலைப்படுவதில் என்ன நியாயம் இருக்கமுடியும்?

இவர்களுக்கு மெய்யாகவே மின்தட்டுப்பாடு குறித்துத்தான் கவலை என்றால் எல்லா நகரங்களிலும் விளம்பரப்பலகைகளுக்காக செலவிடப்படும் மின்சாரம் குறித்து இதே விதமான கவலை இருக்குமா? ஆடம்பரமான விழாக்கள், விளையாடுப் போட்டிகள் போன்றவற்றிற்காக செலவிடப்படும் மின்சாரம் குறித்து இதே விதமான கவலை இருக்குமா? நூறு ஏழைக்குடும்பங்கள் பயன்படுத்தும் மின்சரத்தைக்காட்டிலும் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் பணக்காரக் குடும்பங்கள் குறித்து இதே விதமான கவலை இருக்குமா?

இவ்வளவு மின் தட்டுப்பாட்டுக்கு இடையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு நொடி கூட தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறதே, அது ஏன்? எப்படி? என்று தங்களின் செய்திகள் மூலம் மக்களுக்கு விளக்குவார்களா இவர்கள்? பெருகிவரும் பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்காகத்தான் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் திட்டமிடப்படுகின்றன எனும் உண்மையை தங்களின் செய்திகள் மூலம் மக்களுக்கு விளக்குவார்களா இவர்கள்?

இவைகள் எதையுமே செய்யாமல் ஏழைகள் மிக்ஸியை பயன்படுத்தினால் மின்பற்றாக்குறை கூடும் என்று கூசாமல் கூறுபவர்களையும் அவர்களின் செய்திகளையும் எப்படி புரிந்து கொள்வீர்கள் நீங்கள்?


Advertisements

ஒரு பதில் to “மின்பற்றாக்குறை கூடினால் அது இலவசங்களினாலா?”

Trackbacks/Pingbacks

  1. மின்பற்றாக்குறை கூடினால் அது இலவசங்களினாலா? | Kadayanallur.org - மே 3, 2011

    […] நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: