முஸ்தபா கமாலின் பதிலடிக்கான எதிர்வினை

3 மே

ஆணாதிக்கம் குறித்த அண்மை கட்டுரைகளுக்கு நண்பர் முஸ்தபா கமால் பதிலடி(!) எனும் பெயரில் மறுப்பளித்திருக்கிறார்.

கலிமாவை மறுத்து விட்ட செங்கொடி பெண்ணுக்கு கொடிபிடிக்க புறப்பட்டு இருப்பது வேடிக்கைதான். இப்படித்தான் வாழவேண்டும் என்று தெளிவாக சொல்லும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத செங்கொடி எப்படியும் வாழலாம் என்று படிதாண்டிய பெண்ணுக்கு பரிந்து பேசி வரிந்து கட்டிக்கொண்டு ஆணாதிக்கம் என்று அலறுவது வேடிக்கைதான்.

கணவன் சந்தேகப்படும் அளவுக்கு ஒரு பெண் தன் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வது அவளின் கற்பின் மாசுவன்ரி வேறில்லை. திருமணமான ஒரு பெண் தன் கணவனை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். அதுவன்றி கண்ட கண்ட ஆண்களை சார்ந்திருந்தால் அவளுக்கு பெயர் விபச்சாரி பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பேசுபவர்கள் இதை சிந்திக்க வேண்டும்.

ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் தன் மனைவி அடுத்தவனோடு நெருங்கிப் பழகினால் சும்மா இருப்பார்களா? அப்படிப் பழகாதே என்று சொன்னால் அது ஆணாதிக்கமா? செங்கொடி முதலில் இஸ்லாத்தைப் படிக்கட்டும் பிறகு வந்து எழுதட்டும். முஸ்லிமாகப் பிறந்தும் சென்கொடியால் முகம் மறைத்து சிந்தனையைத் தொலைத்து விட்டு வம்படியாய்ப் பேசுவதை வழக்கமாய் கொண்டவரே! கம்யூனிசம் ஒருபோதும் கரைகொண்டு சேர்க்காது.

முதலில் இது மறுப்பாக வந்தபோது என்னுள் சலனமெதையும் ஏற்படுத்தவில்லை, காரணம் அதில் போதிய உள்ளீடு இல்லை. ஆனால் தொடர்ந்து அது விவாதப்பகுதியிலும் பதியப்பட்டிருப்பது பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் பதிலடி எனக் கூற வேண்டுமாயின் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவைகளை உள்வாங்கி அதன் கூறுகளுக்கு உறுதியான ஆழமான பதில் தொடுத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்தபாவின் பதிலடியிலோ அது போன்ற சாரம் ஏதும் இல்லை. சுருங்கக்கூறின் அக்காட்டுரைகளை படித்தாரா என்பதே ஐயமாக இருக்கிறது. ஏனென்றால் முஸ்தபா எழுப்பியுள்ள கேள்விகள் என்னுடைய கட்டுரையின் எல்லையை விட்டுவிலகியவை. ஆணாதிக்கம் எனும் சொல்லும், இஸ்லாத்தை விட்டுவிலகியிருக்கும் என் தன்மையும், என்னுடைய கம்யூனிசப் பின்புலமுமே அவரை ஆட்கொண்டிருக்கிறது.

ஆணாயினும் பெண்ணாயினும் முறையற்ற காமுறுதலை நான் சரிகண்டிருக்கிறேனா? அல்லது பெண்களுக்கான சுதந்திரம் என்றால் அது வரம்பற்ற கலவி என அருஞ்சொற்பொருள் விளக்கம் தந்திருக்கிறேனா? புரியாமல் ஏதேதோ கேட்டுவிட்டால் அதன் பெயர் பதிலடியா?

முதல் கட்டுரையில் வதந்தி பரப்புபவர்களை சாடியும், குறிப்பிட்ட பெண் ஒடுக்கப்படுபவளாக கருதியதால் அதை ஆதரித்தும் எழுதியிருந்தேன். ஆனால் பெண்ணின் புறத்திலும் தவறிருக்கிறது என உணர்ந்ததுமே, அதையும் வெளிப்படையாக தெரிவித்து சுயவிமர்சனம் செய்திருந்தேன். இதை நண்பர் முஸ்தபா எந்த விதத்தில் தவறென்கிறார்? அதை விளக்கிவிட்டு அவர் பதிலடி என போட்டுக்கொள்ளட்டும்.

இரண்டாவது கட்டுரையில் குறிப்பிட்ட இந்த நிகழ்வின் பின்னணிகளை விளக்கி குற்றம் செய்த பொறுக்கிகள் தப்பித்து விடக்கூடாது என்று நல்லூர் மக்களை கோரியிருந்தேன். இதில் பதிலடி கொடுப்பதற்கான தளம் என்ன இருக்கிறது என்று நண்பர் முஸ்தபா விளக்குவாரா?

முட்டுமல்லாது இதில் தொடர்புடைய ஆணாதிக்கப் பொறுக்கிகள் அனைவரையும் புகைப்படத்துடன் அம்பலப்படுத்தும் திட்டம் இருக்கிறது. இதில் நண்பர் முஸ்தபா ஏதும் பதிலடி கொடுக்க விரும்புவாரா?

பெண்களின் வரம்பு மீறலால் கொதித்துப்போகும் நல்லூர் இளைஞர்கள் ஆண்களின் வரம்பு மீறல்களை கண்டும் காணாமல் போவதற்கு ஆணாதிக்கம் அல்லாது வேறு எதுவும் காரணம் இருக்கும் என நண்பர் முஸ்தபா கருதுகிறாரா?

பெண்ணியம் ஆணாதிக்கம் போன்றவை சமூகப் பிரச்சனைகள் மதங்களுக்குள் அதற்கான தீர்வை தேட முடியாது. கலிமாவை மறுத்துவிட்டு பெண்களுக்கு அதரவாக கொடிபிடிப்பது வேடிக்கையல்ல. இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மதம் அதை மறுக்காமல் ஆணாதிக்கத்தை மறுத்து பேசமுடியும் என நினைப்பதுதான் வேடிக்கையானது.

கம்யூனிசம் கரை சேர்க்காது என நண்பர் முஸ்தபா கருதினால் எப்படி என விளக்கட்டும், தகுந்த விளக்கமளிக்கவும், மீளாய்வு செய்து கொள்வதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். நண்பர் முஸ்தபாவுக்கு வசதி எப்படி?

Advertisements

2 பதில்கள் to “முஸ்தபா கமாலின் பதிலடிக்கான எதிர்வினை”

 1. Syed Ali மே 5, 2011 இல் 7:36 முப #

  Mr.Senkodi,

  you are doubting that he did not read your Article. First you should stop this kind of activities.
  No need your self explanation like below and stop your articles in this website.
  முதல் கட்டுரையில் வதந்தி பரப்புபவர்களை சாடியும்,
  குறிப்பிட்ட பெண் ஒடுக்கப்படுபவளாக கருதியதால் அதை ஆதரித்தும் எழுதியிருந்தேன். ஆனால் பெண்ணின் புறத்திலும் தவறிருக்கிறது என உணர்ந்ததுமே, அதையும் வெளிப்படையாக தெரிவித்து சுயவிமர்சனம் செய்திருந்தேன்.

  Dear Nallur Mulakkam, 1 st Warning!

  I warn you to remove the senkodi page from Web page within two days.

Trackbacks/Pingbacks

 1. முஸ்தபா கமாலின் பதிலடிக்கான எதிர்வினை | Kadayanallur.org - மே 4, 2011

  […] பதிவு: நல்லூர் முழக்கம் window.fbAsyncInit = function() { FB.init({appId: "", xfbml: true}); […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: