பெற்றோர்களே ஏமாறாதீர்கள்!!

29 ஜூன்

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் செலுத்த வேண்டாம்!

 கூடுதலாக கட்டிய பணத்தை திரும்ப பெறவும், மேலும் பணம் கட்டாமல் இருக்கவும்,

மாணவர்கள் மீது நடவடிக்கை என்று மிரட்டினாலும்

உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

தொடர்புக்கு : 9865685333

தனியார் கல்வி முதலாளிகளின் லாபவெறி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெற்றோர்களின் வருமானம் ஒவ்வொரு கல்வி ஆண்டின்  துவக்கத்திலும் கல்விக்காக் பெரும் தொகை கல்வி கொள்ளையர்களால் அபகரிக்கப்ப்டுகிறது. பெற்றோர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முண்னணி, புரட்சிகர அமைப்புகள், மேலும் சில அமைப்புகள் போராடிவருகின்றனர்.

பெற்றோர்களின் இந்த எதிர்ப்பு கல்வி தனியார்மயத்துக்கு எதிரான திசையில் சென்று விடக்கூடாது என எதிர்ப்புணர்வை நீர்த்து போகச் செய்யவும், கல்வி முதலாளிகளின் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கவும் அரசு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை நியமித்தது. அக்கமிட்டி அறிவித்த கட்டணத்தை வசூலித்து எங்களால் கல்வி நிறுவனத்தை நடத்த முடியாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மேல் முறையீடு செய்தார்கள் முதலாளிகள். வாலு போய் கத்தி வந்ததை போல கோவிந்தராஜன் கமிட்டிபோய் ரவிராஜபாண்டியன் கமிட்டி வந்த்து.

நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு மேல்முறையீடு செய்தவர்களுக்கு கட்டணங்களை உயர்த்தியும், சீருடைகள், புத்தகங்களுக்கு தாங்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கி பெற்றோர்களை மேலும் ஒரு சுற்று கொள்ளையடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. கல்வி கொள்ளையர்களோ ரவிராஜபாண்டியன் அறிவித்த கட்டணமும் போதாது இக்குறைவான கட்டணதை வ்சூலித்து தரமான கல்வியைத் தர முடியாது என்கிறார்கள். இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதாக மிரட்டுகிறார்கள்.

ஆனால் எல்லா தனியார் பள்ளிகளிலும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக தான் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு பதில் பெற்றோர்கள் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தனது பொறுப்பை பெற்றோர் தலையில் சுமத்தி முதலாளிகள் கொள்ளையடிக்க துனை போகிறது அரசு.

ஆகவே அரசு மற்றும் கல்வி முதலாளிகளின் கூட்டணிக்கு எதிராக அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்கவும், கல்வி தனியார்மயமாவதை தடுக்கவும் பெற்றோர்கள் மாணவர் உழைக்கும் வர்க்க பிரிவினர் அனைவரும் ஓரணியில் திரண்டு   

போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!

பள்ளியின் பெயர் எல்கேஜி யூகேஜி 1வது 2வது 3வது 4வது 5வது
நேவி நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1750 1650 1650 1650 1650 1650 1650
வாங்கும் கட்டணம் 4500 5000 5500 6000 6500 7000 7500
பெஸ்ட் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1550 1550 3150 3150 3150 3150 3150
வாங்கும் கட்டணம் 4150 3700 4200 4250 4400 4500 4500
டுடே நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1300 1300 2100 2100 2100 2100 2100
வாங்கும் கட்டணம் 5740 6460 6500 6500 6700 6700 6700
சக்ஸஸ் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2300 2300 3200 3200 3200 3200 3200
வாங்கும் கட்டணம் 4550 4550 5000 5000 5500 5500 5500
ரஹ்மானியா நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2400 2400 2850 2850 2850 2850 2850
வாங்கும் கட்டணம் 2500 3000 4000 4500 4500 5000 5000
பாரத் வித்யாலயா நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2100 2100 2000 2000 2000 2000 2000
வாங்கும் கட்டணம் 2200 2200 2500 2500 2700 2700 2700
அன்னை நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 2450 2450 2100 2100 2100 2100 2100
வாங்கும் கட்டணம் 6285 6500 6700 6700 7000 7000 7000
விஸ்டம் மெட்ரிக் ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம்
வாங்கும் கட்டணம் 8600 8600 9000 9000 9500 9500 9500
மார்டன் நர்சரி பிரைமரி ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 1850 1850 1650 1650 1650 1650 1650
வாங்கும் கட்டணம் 4500 5000 5500 6000 6500 7000 7500
எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரசு நிர்ணயித்த கட்டணம் 8150 8150 8050 8050 8050 8050 8050
வாங்கும் கட்டணம் 13600 14600 15000 15000 17000 17000 17000
கிங் யுனிவெர்ஸ் மெட்ரிக் ஸ்கூல் அரசு நிர்ணயித்த கட்டணம் 3300 3300 3800 3800 3800 3800 3800
வாங்கும் கட்டணம் 12500 12500 13000 13000 13500 13500 14000
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: