கடையநல்லூரில் சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது

2 ஆக

 

 

முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டிய கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மத்திய அரசு வகுப்பு கலவர தடுப்பு மசோதாவை இன்று தொடங்கியுள்ள குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக குற்றம் சாட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் ஜெயலலிதாவி்ன் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆர்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நகர செயலாளர் காஜாமூகைதீன், மாணவர் அணி செயலாளர் ரமீத் ஹாசன் உள்பட ஏராளமானோர் ஜெயலலிதாவை கண்டித்து போஸ்டர் ஒட்டினர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த புளியங்குடி டிஎஸ்பி சமீம் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

நேற்று ரமலான் நோன்பு துவக்க நாள் என்பதால் முஸ்லீம்கள் அனைவரும் நோன்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 2 பேர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நகராட்சி பகுதி முஸ்லீம்கள் பெரும்பாலானோர் கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை விட்டுவிடுவதாகக் கூறி அனைவரையும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர்.

ஆனால் போலீசார் உறுதியளித்தபடி அவர்களை விடுவிக்காததால் மீண்டும் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர். போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போலீசார் அவர்களை கலைந்து செல்ல உத்தரவிட்டும் யாரும் கலைந்துபோகவில்லை. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

***************************************************

இந்த மத, திட்டமிட்ட கலவர தடுப்பு மசோதா என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்படுகிறது. அதன் விதிமுறைகள் என்ன சொல்கின்றன என்பன ஒரு புறம் இருக்கட்டும். மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் ஒரு மசோதா மாநில முதல்வருக்கு உவப்பானதாக இல்லை. அதனால் அதனை எதிர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார். இதில் மாநில முதல்வரின் கருத்து தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்று தவ்ஹீத் ஜமாத் எதிர்ப்பு தெரிவிக்கிறது. முதல்வரின் அறிக்கையை எல்லா ஊடகங்களும் வெளியிட்டிருக்கின்றன. தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்ப்பு சுவரொட்டியாக ஒட்டப்படுகிறது. இதற்கு ஏன் கைது நடவடிக்கைகள்?

ஜெயாவின் அறிக்கை ஓரிடத்தில், ”இந்த மசோதா மத, திட்டமிட்ட வன்முறை தொடர்பான பிரச்சாரக் குற்ற வரையறை எனும் எட்டாவது பிரிவில் துவேசத்தனமான கருத்துகளை வெளியிடுவோர், சுவரொட்டி ஒட்டுபவர்கள், துண்டுப் பிரசுரம் கொடுப்பவர்கள் ஆகிய அனைவரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. இதை ஒரு ஜனநாயக அரசால் எப்படி ஏற்க முடியும்?” என்று சொல்கிறது. ஆனால் அவரிடம் இருக்கும் காவல் துறையோ சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்திருக்கிறது.

ஓட்டுக்கட்சி அரசியல் வியாதிகள் சொல்வதும் செய்வதும் உள்நோக்கத்துடனேயே இருக்கும் என்பதற்கு இது ஒன்றே போதுமானது. மற்றப்படி இது போன்ற சட்டங்கள் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது, அதை பரப்பக்கூடாது எனும் நோக்கிலேயே அமைந்து வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். சென்னையை அழகு படுத்துகிறோம் என்று கூறி சுவரொட்டிகள் ஒட்டுவதை தடை செய்தார்கள். காசுள்ளவன் தன்னுடைய நச்சுக்கருத்துகளை தொலைக்காட்சி வாயிலாக வீட்டுக்கே கொண்டு வந்து விடுகிறான். ஏழை மக்கள் தங்கள் கருத்துக்களை சுவரொட்டியாக ஒட்டினால் ஊரின் அழகு குலைந்துவிடும் என்கிறர்கள். அவர்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்று தான் எல்லா அரசுகளும் கருதுகின்றன.

Advertisements

ஒரு பதில் to “கடையநல்லூரில் சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது”

  1. செந்தோழன் ஓகஸ்ட் 2, 2011 இல் 7:31 பிப #

    மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று விடகூடாது என்று ஓட்டு கட்சிகள் மட்டுமல்ல இந்தமாதிரி சமுதாய அமைப்புகளும் அதைத்தான் நினைகின்ற என்கிற கருத்து நிலவுவதுண்டு.இதை மாற்ற வேண்டுமென்றால் இதை இத்துடன் நிறுத்திடாமல் வேறு வகைகளில்(ஊடக மூலமாக)மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும்.இப்பனியை இந்த சமுதாய அமைப்பு செய்கிறதா என பார்ப்போம்

    0.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: