முஹம்மது நபியின் மனைவியர்கள் பற்றிய செய்திகள்

2 ஆக

ஆரம்பத்தை நோக்கி: பகுதி 5

1. கதீஜா

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும்  உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்  (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா  அவர்களது  உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்)  மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்)  இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி,  “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து  வைத்தீர்களே  தெரியவில்லையா?” என்றார்.

“நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.

முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த  உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. (Persian Tabari, Volume-3, Page 832)

 இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது.  இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண்  குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள்  குழந்தைப் பருவத்திலேயே  இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்.  பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்.   கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில்  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார்.

குடும்பத்தையும்,  கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது  தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார் 36,800கோடி ரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.

இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழ‍ந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 264,000 கோடி ருபாய்களை  இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில், 264,000 கோடி  செலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 264 கோடி ரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?

 கதீஜா கிபி 619 அல்லது 623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள்  தனிமையில் வாழ்ந்தார்.HYPERLINK  \l “Safiya”

நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜா  அவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 2. சவ்தா

சவ்தா அவர்களை  திருமணம் செய்வதற்கு முன்பே ஆயிஷாவைத் திருமணம் செய்ததாக ஹதீஸ்களில் காணலாம். சவ்தா அவர்களும்,  இவரது கணவர் நபி (ஸல்) ஏற்று முஸ்லீமாக வாழ்ந்து வந்தனர் பாதுகாப்பு காரணமாக அபிஸீனியா சென்ற இவரது கணவர் கிருஸ்த்துவராக மதம் மாறி அங்கேயே இறந்தார்.  கணவனை இழந்து விதவையாக இருந்த  சவ்தா அவர்களை,  தன்னுடைய பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும் தாம்பத்தியத் தேவைகளுக்காக திருமணம் செய்தார். சவ்தா கருமையான நிறம் கொண்டவர், திடகாத்தரமான உடல்வாகு உடையவர்.  பருமனான உடல்வாகு  காரணமாக மிக மெதுவாக செயல்படும் இயல்புடையவராக இருந்தார். இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களின் மற்ற இளம் மனைவிகளுடன் தன்னால் போட்டியிட முடியவில்லை என்பதால் மன வருத்தமடைந்திருந்தார். ஆயிஷா, இவரது பெருத்த உடல்அமைப்பை கேலி பேசிதாகவும் ஹதீஸ்களில் காணலாம்.

புஹாரி ஹதீஸ் -5212

ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறியதாவது.

 

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக(விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும், சவ்தா  அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கி வந்தார்கள்.

 

தனக்கு துணையாக தன் கணவர் முஹம்மது நபி செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?

 

இதற்கான பதிலை நாம் குர்‍ஆன் 4:128 வசனத்திற்கான விரிவுரைகளில் காணலாம்:

 

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அப்பொழுது அவ்விருவரும் தங்களிருவருக்கிடையே ஏதேனும் ஒரு சமாதனத்தை உண்டாக்கிக்  கொள்வது அவ்வருவரின் மீதும்  குற்றமில்லை

(குர்ஆன் 4:128)

 

குர்‍ஆன் 4:128-ம் வசனத்திற்கு இபின் கதீர் கீழ்கண்ட விளக்கவுரையைத் தருகிறார்:

 

    “தன் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது புறக்கணித்துவிடுவாரோ என்று ஒரு பெண் பயந்தால், அவள் தன்னுடைய எல்லா உரிமைகளையும் அல்லது ஒரு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்கலாம், அதாவது கணவரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொருளாதார உரிமைகள், உடுக்க உடை அல்லது இருக்க வீடு போன்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம், அப்போது அக்கணவர் தன் மனைவியிடமிருந்து வரும் இந்த உரிமைகள் விட்டுக்கொடுத்தலை அங்கீகரித்துக் கொள்ளலாம். த‌ன் உரிமைக‌ளை விட்டுக்கொடுப்பது மனைவியின் தவறில்லை‌, அதே போல‌, த‌ன் ம‌னைவியின் உரிமை விட்டுக்கொடுத்த‌லை அங்கீகரிப்பதும் அந்த‌ க‌ண‌வ‌னின் த‌வ‌று அல்ல‌. இதைத் தான் இறைவ‌ன் கூறுகின்றான்: “அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது”. இத‌ன்ப‌டித் தான், ஸவ்தா வ‌ய‌து சென்ற கிழ‌வியாக‌ மாறின‌ போது, இறைத்தூத‌ராகிய‌ முஹ‌ம்ம‌து அவ‌ளை விவாக‌ர‌த்து செய்ய‌ முடிவு செய்தார். இதனால், ஸவ்தா முஹம்மதுவிடம் இப்படி விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, தன்னிடம் அவர் செலவிடும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாகச் சொல்லி முஹம்மது நபியிடம் வேண்டிக் கொண்டார். இதனால், முஹம்மது நபி (ஸல்) ஸவ்தாவின் உரிமை விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை.

 

    “…இபின் அப்பாஸ் அதிகார பூர்வமாக கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்று ஸவ்தா பயந்தார். ஆகையால், அவரிடம் ஸவ்தா கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, என்னை நீங்கள் விவாகரத்து செய்து விடாதீர்கள். அதற்கு பதிலாக என் நாள் ஆயிஷாவின் நாளாக மாறட்டும். ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அப்படியே செய்தார், குர்ஆன் 4:128ம் வசனம் வெளிப்பட்டது.

ஏன் அல்லாஹ்வின் தூதர் ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?

 

ஸவ்தாவை முஹம்மது நபி (ஸல்)  விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றுச் சொன்னால், ஏன் ஸவ்தா தன்னை அவர் விவாகரத்து செய்து விடுவார் என்று பயப்படவேண்டும்?

 

தன்னிடம் தன் கணவர் முஹம்மது நபி  செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஆயிஷாவிற்கு ஸவ்தா விட்டுக்கொடுக்கவேண்டும்?

ஸவ்தா செய்த பிழை தான் என்ன?

 

இபின் கதீர் அவர்களின் விரிவுரையின் படி, ஸவ்தாவின் எந்த பிழையும் இதற்கு காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் ஸவ்தா வயது சென்றவராக மாறியது தான், அதாவது அவருக்கு வயது கூடிக்கொண்டே சென்றது தான்.

இன்னும் ஒரு சில அறிவிப்புக்கள் உண்மையாகவே முஹம்மது நபி (ஸல்), ஸவ்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறுகிறது, அதன் பிறகு ஸவ்தா அவரிடம் பேசி, தன் உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக சொன்ன போது, முஹம்மது நபி (ஸல்) அதனை அங்கீகரித்தார்.

“Barra narrated that the prophet sent message to Sauda that I have divorced you. When Sauda heard the news, she went and sat in the way of the Prophet to Aisha’s house. When she saw the prophet she told him. I swear thee by the one who has sent you the Quran and has exalted you over all the creation to tell my why did you divorce me. Have I done something wrong that has offended you? The Prophet said no! Sauda said, I then beg you for the sake of the same God to not divorce me. I am getting old I don’t need to be with a man. You can use my turn to stay with Aisha, but I wish that in the day of resurrection to be counted amongst your wives. The Prophet agreed and Sauda said that since then the Prophet spent the nights there were her turn with his favorite wife Aisha.” [Tabaqat V. 8 p. 53-54 Persian translation]

(பாரா அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் சவ்தாவிற்கு, அவரை விவாகரத்து செய்திருப்பதாக ஒரு செய்தியை அனுப்பினார். செய்தியை கேள்விப்பட்ட சவ்தா அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று “உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான், உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் முறையில்  தவறு ஏதேனும் செய்து விட்டேனா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் இல்லையென்றார். ஸவ்தா கூறினார், இறைவனின் பெயரால் கெஞ்சி கேட்கிறேன் என்னை விவாகரத்து செய்து விடாதீர்கள், நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. என் (வீட்டிற்கு வரும்) முறையை நீங்கள் ஆயிஷாவுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் அல்லாஹ்வின் தூதர் (ஸவ்தாவின் கோரிக்கையை) ஏற்றுக் கொண்டார்.  ஸவ்தா கூறினார்: “அதிலிருந்து,  அல்லாஹ்வின் தூதர் தன்னுடன் தங்க வேண்டிய  இரவுகளை அவருக்கு  விருப்பமான மனைவியான ஆயிஷாவுடன் கழித்தார்”)

முஹம்மது நபி (ஸல்)  விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்ய வேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள். விஷயம் எதுவானாலும், ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.

தனக்கு இருக்கும் ஒரே கணவனின் நாளையும், அதற்கான தன் உரிமையையும் ஏன் ஒரு பெண் வேறு ஒரு பெண்ணிற்கு விட்டுக் கொடுக்கிறாள்?

நிக‌ழ்ச்சியின் முழு விவ‌ர‌மும் தெரிந்து கொள்ள, இன்னுமுள்ள‌ குர்‍ஆன் விரிவுரையாள‌ர்க‌ள் குர்‍ஆன் 4:128ம் வசனத்தைப் பற்றி என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதை காண்போம்.

குர்‍ஆன் 4:128 பற்றி ரஜி (Razi) கூறுகிறார்:

        சிலர் கூறுகிறார்கள் “பயப்பட்டாள்” என்றுச் சொன்னால், அதன் பொருள் “அறிந்துக்கொண்டாள்” என்பதாகும். இன்னும் சிலர் கூறுகிறார்கள் “பயப்பட்டாள்” என்றுச் சொன்னால், அதன் பொருள் “நினைத்தாள்” என்பதாகும். ஆனால், இப்படி பொருள் கூறுகிறவர்கள், மிகவும் தெளிவாக புரியக்கூடிய ஒன்றை கவனிக்காமல் அறியாமையில் இருக்கிறார்கள். பயம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், பயம் என்றால் பயம் என்று தான் பொருள், அவ்வளவு தான். பயம் எப்போது வருகிறது, அந்த பயம் உருவாவதற்கான காரண காரணிகள் அல்லது நிகழ்வுகள் நடைப்பெறக்கூடிய சூழ்நிலைகள் தெரியும் போது பயம் வருகிறது. இந்த சூழ்நிலைகள் என்ன? உதாரணத்திற்கு ஒரு ஆண் தன் மனைவியைக் கண்டு, உனக்கு வயதாகிவிட்டது, நீ அசிங்கமாக இருக்கிறாய். நான் ஒரு நல்ல அழகும் இளமையும் கொண்ட வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றுச் சொல்லும் போதுதான் மனைவிக்கு பயம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்துவிடுவது போல, புறக்கணித்துவிடுவது போல காட்டிக் கொள்ள என்ன செய்வான்? அவன் அவளின் முகத்தில் கோபமாக பார்ப்பான், அவளுக்கு தேவையான தாம்பத்ய உறவினை துண்டித்துக் கொள்வான். அவளை கேவலமாக நடத்துவான். இப்படிச் செய்து தன் வெறுப்பை காண்பிப்பான்.

 

ரஜி அவர்கள் விரிவுரை கூறியது போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஸவ்தாவிற்கு செய்து இருப்பாரோ? ரஜி சொல்வது போன்ற சில காரணங்களை கண்டிப்பாக ஸவ்தா கண்டு இருக்கவேண்டும், இதனால் தான் ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமிருந்து விவாகரத்து பெறாமல் இருப்பதற்கு எது சரியான வழி என்று சிந்தித்து, கடைசியாக தன் உரிமையை விட்டுக்கொடுத்து இருக்கக்கூடும்.

இதைப் ப‌ற்றி இபின் க‌தீர் மேலும் கூறும் போது:

        “குர்‍ஆன் வ்ச‌ன‌ம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், “ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம்” என்னை விவாகரத்து செய்ய வேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை” என்று நான் என் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாம்.

        இந்த வசனம் சொல்ல வருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த நிபந்தனையினால் விவாகரத்து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக‌ ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரிகளின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது நபி (ஸல்)  இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது.

இந்த செய்தியைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர் இபின் அல் அரபி (Ibn al-’Arabi) கூறும் போது:

“.. ஸவ்தா  வயதானவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா “என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்” என்றார். அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா இறக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மனைவிகளில் ஒருவராகவே மரணமடைந்தார்கள்.

இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன்.]

ஆக‌, முஸ்லீம்கள் அறியாமையினால் முஹம்ம‌து நபி (ஸல்) அவர்களை கண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றின‌ர் ம‌ற்றும் அதே நேர‌த்தில் இத‌ற்காக‌ அல்லாஹ்வை புக‌ழ்வ‌தையும் ம‌றக்க‌வில்லை.

        டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி (Dr bint ash-Shati’) என்ப‌வ‌ர், இவ‌ர் “இறைத்தூத‌ரின் ம‌னைவிகள் (The Wives of the Prophet [nisaa’ an-Nabi] )” என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌வ‌ர். இவ‌ர் த‌ன் புத்த‌க‌த்தில் “ஸவ்தா பார்ப்ப‌த‌ற்கு அழ‌கில்லாத‌வ‌ராக‌ இருப்பார் ம‌ற்றும் ப‌ரும‌னாக‌ இருப்பார்” என்று கூறுகிறார் ]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உய‌ரமாக‌ இருப்பார், ப‌ரும‌னாக‌ இருப்பார் ம‌ற்றும் நிதான‌மாக‌ வேலை செய்வார்)

டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி, முஹம்மது மற்றும் ஸவ்தாவின் திருமண பந்த உறவு பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார்:

        ஸவ்தா தன் அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டது என்னவென்றால், தனக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திற்கும் இடையில் மிகப்பெரிய தடை அல்லது பிளவு உள்ளது என்பதை உணர்ந்தார். தனக்கு தரப்பட்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு தங்கும் அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார்.

இருவருக்கும் இடையே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?

டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாதி கூறுகிறார்: ஹோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 6 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து “யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக் கொள்வார்க‌ள், யார் இறைத் தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள்” என்று கேட்டாராம். அத‌ற்கு ஹோலா “ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்” என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌து நபி (ஸல்) அவர்களின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள்.

இப்போது நமக்கு காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மகள்களை கவனிக்கும் வேலைக்கார ஆயாவாக‌ மாறினார்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  முதல் மனைவி கதீஜா இறந்த பிறகு அவரின் வேதனையான‌ நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப் போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லையென்பதுதான் குற்றச்சாட்டு.

குர்‍ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.

(குர்ஆன் 30:21)

       குர்‍ஆன் சொல்லும் அந்த‌ அன்பு ம‌ற்றும் உவ‌ப்பு எப்ப‌டிப்ப‌ட்ட‌தாக‌ இருக்கிற‌து? அதில் உள்ள குறைபாடு என்ன என்ப‌தை இதுவரை நாம் க‌ண்ட‌ நிக‌ழ்ச்சி மூல‌ம் அறிந்து கொள்ள‌லாம்.

குர்‍ஆன் சொல்லும் அன்பு, இர‌க்க‌ம் போன்ற‌வைக‌ள் ஸவ்தாவிற்கு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் காண‌ப்ப‌ட‌வில்லையே?

இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:

வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.

மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: “எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்” .

ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்து விட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது நபி (ஸல்) வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது நபி (ஸல்) ஒரு பின்பற்றத்தக்க உதாரண மனிதராக  இருப்பதாக குர்‍ஆனிலே அல்லாஹ் புகழ்ந்துகூறுகிறான்.

நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்

(குர்ஆன் 68:4)

சரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா  தள்ளாத வயதுடைய மூதாட்டியா?

                கலீபா முவஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 54 -ம் ஆண்டு இறந்ததாக  இப்ன் ஸாத் தபாக்கத் கூறுகிறது. இறப்பின் பொழுது ஸவ்தா அவர்களுடைய வயதை சரியாக அறிய முடியவில்லை. ஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்தார். அதாவது, 3 + 54 = 57 ஆண்டுகள்  முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார். ஸவ்தா 80 வயதில்  இறந்ததாக  கொண்டால்,  80 – 57 = 23, முஹம்மது நபி, ஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 23 வயதாக இருந்திருக்கலாம். இதன் அடிப்படையில்  ஸ்வ்தாவை விட  முஹம்மது நபி 27 வயது முதியவர்.

இந்தகணக்குகளின் அடிப்படையில் நோக்கினால் தன்னுடைய 63-ம் வயதில் முஹம்மது நபி இறக்கும் பொழுது ஸ்தாவிற்கு சுமார் 63 – 27 = 36  வயது  இருக்கலாம்.  36 வயது ஸவ்தா கிழவியென்றால் 63 வயது முஹம்மது நபி இளைஞரா ?

3. ஆயிஷா

  ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறு, தாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில். நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896,5133,5134,5156,5158,5160). இவரைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்.

தொடரும்

 

இதுவரை

துவங்கும் முன்

72 கூட்டத்தினர் யார்?

வழிபாடுகளில் கவனம் தேவையா?

சாத்தானின் வேதம்

Advertisements

12 பதில்கள் to “முஹம்மது நபியின் மனைவியர்கள் பற்றிய செய்திகள்”

  1. S.Ibrahim திசெம்பர் 19, 2011 இல் 4:23 முப #

    ////இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 264 கோடிரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?////
    அதெப்படி நம்ப முடியும்? என்னவோ ஸ்பெக்ட்ரம் கணக்கில் சொன்னால்,
    மவுலான ,மவுலவி முஹம்மது மைதின் பாக்கவி முப்தி என்ற அறிஞர் எழுதிய “கதிஜா [ரலி ]அவர்க்களின் வாழ்க்கை வரலாறு “நூலில் படித்தேன் கதிஜா அவர்களின் சொத்து மதிப்பை கணக்கிட முடியாது என்றும் எந்த வேலையும் பார்க்காமல் ஊர் சுற்றிவந்து ஒரு நாளைக்கு நூறு கோடி ரூபாய் செலவழித்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு செலவழிக்கலாம் என்றுஅந்த நூலில் கூறப்பட்டுள்ளது .ஐம்பது ஆண்டுகளிலே தரித்திர நிலை அடைந்ததாக நீங்கள் கூறியுள்ளது தவறு.

    • தஜ்ஜால் திசெம்பர் 30, 2011 இல் 3:57 பிப #

      @ இப்ராஹிம்,
      கதீஜாவின் சொத்து மதிப்பை கணக்கிட்டது நாங்களல்ல. உங்களவர்கள் எழுதிவைத்திருக்கும் குறிப்புகளிலிருந்துதான் அவை எடுக்கப்பட்டுள்ளது. முஹம்மதின் தாடியிலிருந்த நரைமுடிகளை எண்ணிக் கணக்கிட்டவர்கள், அவரால் ஒன்றுமில்லால்போன சொத்து மதிப்பைக் கவனித்திருக்க மாட்டார்களா? கட்டுரையில் குறிப்பிடப்பட்டது தவறு என்று நீங்கள் கருதினால் சரியான அளவை துள்ளியமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று உளறுவதில் பொருளில்லை. மேலும் உங்களவர்களின் இட்டுக்கட்டல்களை சுட்டிக்காட்டவே கதீஜாவின் சொத்து மதிப்பு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      தஜ்ஜால்

      • S.Ibrahim திசெம்பர் 31, 2011 இல் 4:22 முப #

        ////மேலும் உங்களவர்களின் இட்டுக்கட்டல்களை சுட்டிக்காட்டவே கதீஜாவின் சொத்து மதிப்பு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.////

        நன்றி ,இது மட்டும் இட்டுக்கட்டல் அன்று . இஸ்லாத்தினை வசைபாட அனைவருமே இது போன்ற இட்டுக் கட்டியவைகளையே ஆதாரமாக காட்டியுள்ளனர். நீங்கள் இப்போதைய இட்டுகட்டியவைகளை இங்கே ஒப்புக் கொண்டீர்கள். மற்றும் தபரி ,தபாகத் களிலிருந்து இட்டுகட்டியவைகளையும் ,பொய்களையும வைத்தே நீங்களும் உங்களை போன்றவர்களும் இஸ்லாத்தை விமர்சித்து வருகின்றனர்.அதற்கு சரியான பதிலடிகள் கொடுக்க சில மார்க்க அறிஞர்கள் முன்வருவார்கள் என்று நம்புகிறேன் .

      • தஜ்ஜால் ஜனவரி 17, 2012 இல் 3:59 பிப #

        அழைத்து வாருங்கள் காத்திருக்கிறோம்

    • ahamed ஏப்ரல் 5, 2012 இல் 8:49 முப #

      allah ungalai padugapanaga

  2. islam மார்ச் 13, 2012 இல் 12:23 பிப #

    ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) – கதீஜா (ரழி) அவர்கள் இறந்து ஒரு மாதத்திற்குப் பின் நபித்துவத்துடைய பத்தாம் ஆண்டு ஷவ்வால் மாதத்தில் இவர்களை மணமுடித்தார்கள். ஒன்றுவிட்ட சகோதரன் மகன் சக்ரான் இப்னு அம்ருக்கு இவரை மணமுடித்து தரப்பட்டிருந்தது. அவன் மரணத்திற்குப் பின் நபி (ஸல்) ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 54, ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள் link;http://www.tamililquran.com/mohamed.asp?file=mohamed-113.html

    • S.Ibrahim மார்ச் 26, 2012 இல் 7:58 முப #

      தஜ்ஜால் எங்கே அழைத்து வரவேண்டும்?

  3. nawas மார்ச் 22, 2012 இல் 2:49 பிப #

    உன்னக்கு ஏன் இந்த வேலை? the 100
    100 எனும் புத்தகத்தை எழுதிய மைக்கல் ஏன் நபி முகமது விற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் .அவர் நன்றாக சிந்தித்து
    பார்த்தார் உலகில் சிறந்த மனிதர்
    அமெரிக்காவும் .சிறந்த சட்டங்களை
    தந்த முஹம்மது நபி இற்கு புகழாரம் சூடியதை ஏன் உனக்கு தெரியவில்லையா
    உலகத்தை பற்றி தெரியாத உனக்கு இது தேவையா ?

  4. sm.mubarak செப்ரெம்பர் 19, 2012 இல் 7:35 முப #

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கேளிசெய்யூம் உனது எண்ணம் நிறைவேறாது. அவர் புகழப்பட்டவர். ஈருலகிலும் அவர் புகழ்ளை அல்லாஹ் ஏற்றுக்கொண்டிருக்கின்றான்.
    இவ்ஈனச் செயலுக்கான மறுமையில் பலன் அனுபவிப்பாய் மனிதனே!

  5. Sumitha ஜூலை 29, 2013 இல் 9:03 பிப #

    All the religious leaders are this like only. for example as per Darvin Coat Christ had secret wife [that was also Brothel]

  6. joseph ஏப்ரல் 1, 2014 இல் 11:07 பிப #

    its good article i want to know where the kuran and hathis books in tamil are avail,please tell me if there is a link for this put it on this blog thank you

Trackbacks/Pingbacks

  1. முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 2 « - செப்ரெம்பர் 1, 2011

    […] முஹம்மது நபியின் மனைவியர்கள் பகுதி 1 இவைகளில் பகிருங்கள்:மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌TwitterFacebookLinkedInEmailPrintDiggRedditStumbleUponLike this:LikeBe the first to like this . […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: